கவிதைச்சோலை - லாபம் என்ன?
சொன்னாலும் தெரிவதில்லைசுய புத்தி இருப்பதில்லைபின்னாலே வருந்துவதில்என்னாலும் லாபமில்லை!கண்ணாடி கூண்டுக்குள்ளேகல்லால் எறிந்து விட்டுகனலாக கண்ணழுதால்யாருக்கும் லாபமில்லை!நினைவிருக்கும் போதினிலேநிலையாக இல்லாமல்களைத்திருக்கும் போதினிலேகதறுவதில் லாபமில்லை!நெஞ்சமதை வஞ்சித்துநெறி தவறி செய்து விட்டுகெஞ்சியே கலங்குவதால்யாருக்கும் லாபமில்லை!மாந்தர் தம் சொல் கேளாதுமா பாவங்கள் செய்த பின்னேசிதைந்தொழுத வாழ்வுதனில்சிறப்பான லாபமென்ன!திறத்தோடு செய்வதைசெய்யாமல் தவற விட்டுதிருவருளை குறை சொன்னால்யாருக்கு லாபமடி!கருத்தினிலே தெளிவில்லைமுயன்றது முடியவில்லைஉடலதில் தெம்பில்லைஅழுவதில் லாபமென்ன!பணிவோடு செய்வதனைமதியாது தவற விட்டுபிணியோடு பரிதவித்தால்யாருக்கும் லாபமில்லை!—சுரேஷ் ராஜகோபால், சென்னை.