உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - நின்று போனவர்கள்!

* என்றுமே தங்களைஅலங்கரித்துக் கொள்வதில்லைஅர்ச்சனைப் பூக்கள்!* விபரித்துக் கொள்ள என்றுமேவிரும்பியதில்லை விருந்துக்குவித்திடும் விவசாயிதான் விதைத்த விதை இதுவென்று!* தோற்றதின் சிரமத்தைஒருபோதும்சொல்லிக் கொள்ள விரும்பியதில்லைசோதனையில் வென்றவர்கள்!* மவுனத்தின் சகுனத்திலேயேமறைத்துக் கொள்கின்றனர்சரித்திரத்தை வென்றசாதனையாளர்கள்!* உடனடித் தேவைகளுக்குஉதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்நெஞ்சத்தை வென்றுநிரந்தரமாக நின்று போகின்றனர்!* இருப்பதை கொடுத்து விட்டுஇல்லாமல் போகிறவர்கள்பொக்கிஷமாகபுதைந்து விடுகின்றனர்எல்லார் இதயங்களிலும்!* கொடுப்பதில் பெருமை என்றாலும்சொல்லாமல் அளிப்பதன் சுகங்கள்சொர்க்கத்திலும் கிடைப்பதில்லைவள்ளல் பெருமக்களுக்கு!* விண்ணைத் தொட நினைக்கும்வெற்றியாளர்களுக்குவிளம்பரம் தேவையில்லைஅவர்கள் அமைதி ஒன்றேஅகிலம் அறியச் செய்யும்!— க. அழகர்சாமி, கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !