கவிதைச்சோலை! - இன்னும் இருக்கிறது!
இன்றைய தோல்வியில் இறுகி விடாதே... நாளை என்றொரு நாள் இருக்கிறது! இந்த திசையில் வாய்ப்பின்றி போனால் என்ன... இன்னும் ஏழு திசைகள் மிச்சம் இருக்கிறது!இந்த கதவு திறக்க மறுக்கிறதா? நிறையக் கதவுகள் நீ தட்டித் திறக்க காத்திருக்கிறது!இந்த களத்தில் நீ பங்கெடுக்க முடியலையா? வேறு களங்கள் நீ விளையாட தயாராகி கொண்டிருக்கிறது!இந்த மேடைஉனை அனுமதிக்கவில்லையா? பல நுாறு மேடைகள் உனைப் பாராட்ட இருக்கிறது!இந்த விடியல் உன் மீது ஒளி சிந்தவில்லையா? இன்னும் விடியல்கள் ஏராளம் இருக்கிறது!இந்த தருணம் உனக்கு அமையாது போனதா? எதிர் வரும் காலமெல்லாம் உனக்கே உனக்காய் செயலாற்ற சித்தமாயிருக்கிறது! — எம்.மகாலிங்கம், திருப்பூர்.