உள்ளூர் செய்திகள்

பாடிக் கொண்டிருக்கும் போதே...

'பாடிக் கொண்டு இருக்கும் போதே மேடையில் உயிர் விட வேண்டும்; அதுதான் என் ஆசை...' என்கிறார் பழம்பெரும் பாடகி மாதுரி. சிறு வயதிலிருந்தே சங்கீதம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். இவரது அம்மா சாரதாம்பாள், பிரபல பாடகர் லால்குடி ஜெயராமின் தந்தை, லால்குடி கோபால ஐயரின் சிஷ்யை என்பதால், சிறுமி மாதுரிக்கும் சங்கீத ஞானம் ஏற்பட்டது. மாதுரிக்கு கர்நாடக இசையை விட, சினிமா பாடல்கள் மீது தான் மோகம். வீட்டில் சினிமா பாடல்கள் பாடவோ, கேட்கவோ தந்தை அனுமதித்தது இல்லை. பள்ளிக்கு செல்லும் போது ஓட்டல்களில் உள்ள வானொலியில் இருந்து ஒலிக்கும் சினிமா பாடல்களை கேட்டு, அதை தனிமையில் பாடி ரசித்திருக்கிறார். 18வயது ஜெயராமன், சிறுமியான மாதுரியை மணந்தார். இன்று, கணவர் உயிருடன் இல்லை; இவரது இரு மகன்கள் கனடாவில் பணியாற்றுகின்றனர். அடிக்கடி மகன்கள் வீட்டுக்கு போய் வருகிறார் மாதுரி.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !