உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தனிமைதனியாகவே வந்துதனியாகவே போக வேண்டியநமக்கு தனிமை கண்டுஅச்சம் ஏன்?குழந்தைக்கு தனிமைகண்ணுறக்கம் கொள்ளஇளமையில் தனிமைகல்வியில் செம்மை பெற...வேலையில் தனிமைகவனிக்கும் திறன் அதிகரிக்கநடு வயதில் தனிமைநம்மை புரிந்து கொள்ள...முதுமையில் தனிமைமுன் நாட்களை அசை போட்டுமுற்றும் துறக்க...இருந்தும், தனிமையைவிரட்ட என்னவெல்லாம்செய்கிறோம்...தனிமைப்படுவதற்கும்தனிமைப்படுத்துவதற்கும்வேற்றுமை உண்டு!கூடலில் பிறந்துகுடும்பத்தில் வாழ்ந்துகும்பலில் கலந்துகூச்சலில் தவிக்கும்இந்தியக் குடிமகன்தனிமை கண்டுஅச்சம் கொள்வதில்ஆச்சர்யம் இல்லை!— தேவவிரதன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !