மேலும் செய்திகள்
பெண் கொலையில் காதலர் கைது காட்டி கொடுத்தது மொபைல் போன்
41 minutes ago
போக்குவரத்து துறைக்கு ரூ.7,000 கோடி நிதியுதவி
47 minutes ago
பெண்ணுக்கு கொடுமை போலீசார் மீது குற்றச்சாட்டு
48 minutes ago
பெங்களூரு: கர்நாடக பா.ஜ., பிற்படுத்தப்பட்டோர் பிரிவு எனும், பி.சி., இனத் தலைவர் நரேந்திர பாபு, நேற்று காங்கிரசில் இணைந்தார். கட்சிக்காக உழைத்தவர்களை, பா.ஜ., தலைமை புறக்கணிப்பதாக அவர் கூறினார். பெங்களூரு ராஜாஜிநகர், மஹாலட்சுமி லே - அவுட் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில், தலா ஒரு முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் நரேந்திர பாபு. கடந்த, 2017ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். கர்நாடக பா.ஜ., பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவராக பணியாற்றினார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி, பா.ஜ., உறுப்பினர் பதவி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரசில் இணைய போவதாக அறிவித்தார். அதன்படி, நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் ஹரிபிரசாத், முதல்வர் சிவகுமார், அமைச்சர் ராமலிங்கரெட்டி முன்னிலையில், நரேந்திர பாபு காங்கிரசில் இணைந்தார். பின், அவர் கூறியதாவது: நான் சந்தர்ப்பவாத அரசியல்வாதி இல்லை. எனது அரசியல் வாழ்க்கையில், 10 ஆண்டுகள் பா.ஜ.,வுக்கு அர்ப்பணித்து உள்ளேன். ஆனால் அந்த கட்சி எனக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை. என்னையும், எனது ஆதரவாளர்களையும் ஓரம்கட்டியது. கடந்த, 2019ல் மஹாலட்சுமி லே - அவுட் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் நான் தான் போட்டியிட்டு இருக்க வேண்டும். ஆனால் பா.ஜ., மேலிடம் கூறியதால், கோபாலய்யாவுக்கு தொகுதியை விட்டு கொடுத்தேன். பா.ஜ.,வில் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா மட்டும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எந்த நிபந்தனையும் இன்றி காங்கிரசில் இணைந்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். நரேந்திர பாபு பிற்படுத்தப்பட்ட சமூகமான, திகலாவை சேர்ந்தவர்.
41 minutes ago
47 minutes ago
48 minutes ago