உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மயக்க பிரட் கொடுத்து 2 பசுக்கள் கடத்தல்

மயக்க பிரட் கொடுத்து 2 பசுக்கள் கடத்தல்

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரெ தாலுகாவின், பனகல் கிராமத்தில், வீடு ஒன்றின் முன்பாக கொட்டகையில் இரண்டு பசுமாடுகள் கட்டப் பட்டிருந்தன. நேற்று அதிகாலை 3:00 மணியளவில், காரில் வந்த மர்ம நபர்கள் பசு மாடுகளை கண்டு, காரை நிறுத்தினர். பிரட்டில் மயக்க மருந்து கலந்து, பசுக்களை சாப்பிட வைத்தனர். அவை லேசாக மயக்க நிலைக்கு சென்றதும், காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவியது. பசுக்களின் உரிமையாளர் பனகல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை