மேலும் செய்திகள்
அமைச்சருடன் சந்திப்பு
1 hour(s) ago
அடுத்தவர் நிலத்தை அபகரித்த 80 வயது மூதாட்டி கைது
1 hour(s) ago
கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 400 கால்நடை மருத்துவ அதிகாரிகள் தேர்வு செய்யும் தேர்வில், முறைகேடு நடந்தது பற்றி, சி.ஐ.டி., விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார் கங்குவார், க டந்த 30ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை தங்கள் காவலில் எடுத்து, சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணை யில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, தேர்வு முறைகேட்டில் பீதர் மாவட்டம், பால்கியை சேர்ந்த பா.ஜ., பிரமுகர் பசவராஜ் கன்னாலே, 40, என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. ஞானேந்திரகுமார் கொடுத்த தகவலின்படி, பசவராஜ் கன்னாலேயை கைது செய்ய, பெங்களூரு சஞ்சய்நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சி.ஐ.டி., அதிகாரிகள் சென்றனர். அவர் அங்கு இல்லை. ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், வீட்டிற்கு 'சீல்' வைத்தனர். பால்கியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றும் சோதனை நடத்தினர். அங்கும் பசவராஜ் இல்லை. உஸ்பெகிஸ்தான் இந்நிலையில், டில்லியில் இருந்து, மத்திய ஆசியா நாட்டின் உஸ்பெகிஸ்தானுக்கு, விமானம் மூலம் தப்பி செல்ல பசவராஜ் முயன்றார். நேற்று முன்தினம் அவரை டில்லி விமான நிலையத்தில், சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். பெங்களூரு அழைத்து வந்து விசாரித்தனர். முதலாவது கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.ஐ.டி.,க்கு, நீதிபதி அனுமதி அளித்தார். பசவராஜை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்று போலீஸ் விசாரிக்கிறது. இந்நிலையில், பசவராஜை காவலில் எடுக்கும், ரிமாண்ட் மனுவில் சில பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றிருந்தன. எம்.எல்.ஏ., ஆவேன் பீதர் மாவட்ட தலைமை செயல் அதிகாரியாக, கடந்த 2019ம் ஆண்டு முதல், 2021ம் ஆண்டு வரை, ஞானேந்திரகுமார் பணியாற்றினார். அப்போது இருந்தே அவருக்கும், பசவராஜ் கன்னாலேவுக்கும் இடையில் நட்பு இருந்துள்ளது. கடந்த, 2024ம் ஆண்டு முதல், கடந்த மார்ச் மாதம் வரை, கே.பி.எஸ்.சி.,யில் தேர்வு கட்டுப்பாடு அதிகாரியாக ஞானேந்திரகுமார் பணியாற்றினார். இந்த காலத்தில் ஞானேந்திர குமாரும், பசவராஜ் கன்னாலேவும் அடிக்கடி மொபைல் போனில் பேசியுள்ளனர். 'வரும், 2028 சட்டசபை தேர்தலில், பால்கி தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுவேன். நான் கண்டிப்பாக எம்.எல்.ஏ., ஆவேன். நாம் இருவரும் சேர்ந்து வினாத்தாள்களை விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். எதற்கும் பயப்பட வேண்டாம்' என்று, ஞானேந்திரகுமாருக்கு, பசவராஜ் கன்னாலே ஆசை காட்டினார். பணம் சம்பாதிக்கும் ஆசையில், ஞானேந்திரகுமார் ஒப்பு கொண்டார். முதல் குற்றவாளி இதையடுத்து, கால்நடை மருத்துவ அதிகாரி பணிக்கு தேர்வு எழுதியவர்களில், 29 பேரை முன்கூட்டியே அடையாளம் கண்டு, பசவராஜ் கன்னாலே 'டீலிங்' பேசியுள்ளார். ஒவ்வொருவரிடம் இருந்தும், தலா, 40 லட்சம் ரூபாய் முதல், 80 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வு வினாத்தாளை, பாதுகாப்பு அறையில் இருந்து ஞானேந்திரகுமார் எடுத்து கொடுத்துள்ளார். ஆந்திரா, துமகூரு, பெங்களூரில் உள்ள ஒரு ரிசார்ட்டிற்கு, 29 பேரையும் அழைத்து சென்று, வினாத்தாள்களை கொடுத்து தேர்வுக்கு தயாராக வைத்துள்ளனர். பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்ற, 10 பேர், அப்ரூவராக மாற ஒப்பு கொண்டு உள்ளனர். இந்த வழக்கில் கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர் முதல் குற்றவாளி; கே.பி.எஸ்.சி., உறுப்பினர்கள் 2வது குற்றவாளி; அதிகாரிகள் 3 வது குற்றவாளி; முறைகேடு செய்து தேர்வு எழுதிய 29 தேர்வர்கள் 4 வது குற்றவாளியாகவும்; ஞானேந்திர குமார் 5 வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பல்கலை உறுப்பினர் இதற்கிடையில், பா.ஜ., முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயண், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோருடன், பசவராஜ் கன்னாலே எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகின்றன. இதனால் தேர்வு முறைகேட்டில் பா.ஜ., தலைவர்களுக்கு தொடர்பு உள்ளதாக, காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். பசவராஜ் கன்னாலே, துமகூரு பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக உள்ளார். இவரை உறுப்பினராக நியமித்து காங்கிரஸ் அரசு தான். இதனால் அவர் செய்த முறைகேட்டிற்கு, காங்கிரஸ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று, பா.ஜ., தலைவர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago