உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி

 உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி

பெங்களூரு: உள்ளாட்சியின் சில இடங்களுக்கு நடந்த தேர்தல் முடிவுகள், நேற்று வெளியானது. இதில் எதிர்க்கட்சி பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. தட்சிணகன்னடா மாவட்டத்தின், பஜ்பே பட்டண பஞ்சாயத்தின் 19 இடங்கள், கின்னகோளி பட்டண பஞ்சாயத்தின் 18 இடங்களுக்கு, டிசம்பர் 21ல் தேர்தல் நடந்தது. உத்தரகன்னடா மாவட்டத்தின, மங்கி பட்டண பஞ்சாயத்து, பெங்களூரு ரூரல் மாவட்டத்தின், பாஷெட்டிஹள்ளி பட்டண பஞ்சாயத்துக்கும், அதே நாளில் தேர்தல் நடந்திருந்தது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. பஜ்பே பட்டண பஞ்சாயத்தில் பா.ஜ., 11 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் நான்கு இடங்கள், எஸ்.டி.பி.ஐ., மூன்று இடங்கள், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். கின்னிகோளி பட்டண பஞ்சாயத்தில், பா.ஜ., 10 இடங்கள், காங்கிரஸ் எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மங்கி பட்டண பஞ்சாயத்தில் 12 இடங்களில் பா.ஜ., எட்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தொட்டபல்லாபூரின், பாஷெட்டிஹள்ளி பட்டண பஞ்சாயத்து தேர்தலிலும், பா.ஜ.,வின் கை ஓங்கியுள்ளது. 19 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., 14 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றதால், அக்கட்சியின் தேசிய அமைப்பு செயலர் சந்தோஷ், 'எக்ஸ்' வலைதளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை