உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முட்டையில் நச்சு எதுவும் இல்லை அமைச்சர் குண்டுராவ் தகவல்

 முட்டையில் நச்சு எதுவும் இல்லை அமைச்சர் குண்டுராவ் தகவல்

பெங்களூரு: ''முட்டையில் புற்று நோய்க்கு காரணமான, எந்த ரசாயனமும், நச்சும் இல்லை. ஆய்வறிக்கையில் முட்டை பாதுகாப்பனது என்பது தெரிய வந்துள்ளது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முட்டைகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பினோம். தற்போது ஆய்வு அறிக்கை வந்துள்ளது. அதில், முட்டையில் புற்று நோய்க்கு காரணமான நச்சுக்களோ, ரசாயனமோ இல்லை. முட்டை பாதுகாப்பானது; மக்கள் பயமின்றி சாப்பிடலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது. தேவையற்ற வதந்தியை நம்பி மக்கள் பயப்பட தேவையில்லை. எந்தெந்த சமுதாய சுகாதார மையங்களுக்கு, நோயாளிகள் வருகை குறைவாக உள்ளதோ, அங்குள்ள சிறப்பு டாக்டர்கள் வேறு சுகாதார மையங்களுக்கு மாற்றப்படுகின்றனர். எந்த சமுதாய சுகாதார மையங்களையும் மூடவில்லை. சிறப்பு டாக்டர்களை மட்டும் மாற்றிவிட்டு, அந்த மையங்களுக்கு எம்.பி.பி.எஸ்., டாக்டர்களை நியமிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை