உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; சிறப்பு பஸ்கள் இயக்கும் பி.எம்.டி.சி.,

 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; சிறப்பு பஸ்கள் இயக்கும் பி.எம்.டி.சி.,

பெங்களூரு: 'ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் பொது மக்களுக்காக வரும் 31ம் தேதி முதல் மறுநாள் அதிகாலை வரை கூடுதலாக 70 பஸ்கள் இயக்கப்படும்' என, பி.எம்.டி.சி., நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி, மெட்ரோ நிறுவனம், பயணியர் வசதிக்காக கூடுதல் ரயில்களை இயக்க முன்வந்துள்ளது. அதுபோன்று பி.எம்.டி.சி., நிர்வாகமும், ஆங்கில புத்தாண்டை ஒட்டி, சிறப்பு வசதியை செய்துள்ளது. இதன்படி, வரும் 31ம் தேதி இரவு 11:00 மணி முதல் ஜனவரி 1ம் தேதி அதிகாலை 2:00 மணி வரை எம்.ஜி., சாலை, பிரிகேட் சாலையில், 70க்கும் மேற்பட்ட பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. பிரிகேட் சாலையில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி, ஜிகனிக்கு தலா ஆறு; எம்.ஜி., சாலையில் இருந்து சர்ஜாபூர், ஹொஸ்கோட், சன்னசந்திராவுக்கு தலா ஆறு; கெங்கேரி, நெலமங்களா, எலஹங்கா, பாகலுார், காடுகோடி, பனசங்கரிக்கு தலா நான்கு, ஜீவன் பீமா நகருக்கு இரண்டு; சர் எம்.விஸ்வேஸ்வரய்யா மெட்ரோ நிலையத்தில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டுக்கு நான்கு; மெஜ்டிக்கில் இருந்து கோரமங்களாவுக்கு இரண்டு உட்பட 70 பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, பொது மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து கொண்டு, சொந்த வாகனங்களில் செல்வதற்கு பதில், அரசு பஸ்களில் பயணம் செய்யுங்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை