உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கீரையை சமைக்கும் போது கொஞ்சமாக சர்க்கரை சேர்க்கலாம்

கீரையை சமைக்கும் போது கொஞ்சமாக சர்க்கரை சேர்க்கலாம்

 ரவா தோசை மாவில் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு கலந்து சுட்டால், தோசை பொன்னிறமாக மொறுமொறுப்பாக வரும்  கேரட் சூப் தயாரிக்கும் போது, சிறிதளவு வறுத்த சேமியா சேர்த்தால், சூப் கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்  பக்கோடாவுக்கு மாவு தயாரிக்கும் போது சிறிதளவு நெய் மற்றும் உப்பு சேர்த்த தயிர் கலந்து பிசைந்தால், பக்கோடா நன்றாக மொறுமொறுப்பாக வரும்  எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும் கடுகு எண்ணெய் சேர்த்தால் நீண்ட நாட்கள் ஆனாலும் கெட்டு போகாது  சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கொஞ்சமாக பாலும், சர்க்கரையும் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்  கீரை மற்றும் காய்கறிகளை சமைக்கும் போது, ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்  மோர் குழம்புக்கு தாளிக்கும்போது, மூன்று கிராம்புகளை சேர்த்தால், கூடுதல் மணம், சுவை கிடைக்கும்  சாம்பார் தயாரிக்கும்போது, சிறிது சௌசௌ காயை வதக்கி சேர்த்தால், சாம்பாருக்கு நல்ல மணமும் கூடுதல் சுவையும் கிடைக்கும்  முட்டையை வேகவைக்கும் போது தண்ணீரில் வினிகர் சேர்த்தால், முட்டை உடையாமல் பதமாக வெந்திருக்கும்  நறுக்கிய கத்திரிக்காய், வாழைக்காய்களை சிறிது உப்பு கலந்த மோர் தண்ணீரில் போட்டு வைத்தால், அவை மாறாமல் இருக்கும்  பால் அல்வா தயாரிக்கும் போது, சிறிதளவு கோகோ பவுடர் சேர்த்து கிளறினால், சாக்லெட் சுவையுடன் கூடிய பால் அல்வா தயார்  அடை மாவில் சிறிதளவு கான் பிளேக்ஸ் சேர்த்து தயாரித்தால், அடை மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை