உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பேடிஎம் வங்கி: அமலாக்க துறை விசாரணை

பேடிஎம் வங்கி: அமலாக்க துறை விசாரணை

புதுடில்லி: 'பேடிஎம் பேமென்ட்ஸ்' வங்கிக்கு எதிராக அமலாக்கத்துறை, அதன் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.சமீபத்தில் ரிசர்வ் வங்கி, பிப். 29ம் தேதிக்கு பின், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி, டிபாசிட்கள் பெறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கி தரப்பில் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், ரிசர்வ் வங்கி ஏற்க மறுத்தது.கடந்த வாரம் பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய்சேகர் ஷர்மா, ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த நிலையில், தற்போது அமலாக்கத் துறை பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கு எதிராக, முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது. 'பெமா' எனும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிமுறை மீறலில், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி ஈடுபட்டதா என்பது குறித்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை