| ADDED : ஆக 02, 2024 12:18 AM
புதுடில்லி:'டிக்சன் டெக்னாலஜிஸ்' நிறுவனம், லேப்டாப் தயாரிப்புக்காக, சென்னையில் புதிய ஆலை ஒன்றை திறக்க உள்ளதாக, அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.'நோட்புக்' தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நான்கு நிறுவனங்களுக்காக, லேப்டாப்களை டிக்சன் தயாரித்து வழங்க உள்ளதாகவும்; இதற்காக சென்னையில் புதிய ஆலை ஒன்றை நிறுவ உள்ளதாகவும் இந்நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான அதுல் பி லால் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது:சென்னையில் லேப்டாப் தயாரிப்பு ஆலைக்கான இடம் அடையாளம் காணப்பட்டு, அது கையகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த எட்டு முதல் 10 மாதங்களில், இந்த ஆலை செயல்படும். தற்போது, 'ஏசர்' நிறுவனத்துக்காக, நோட்புக்குகளை தயாரித்து வருகிறோம். முதற்கட்டமாக, 'லெனோவா' நிறுவனத்துக்கான லேப்டாப்களை தயாரித்து வழங்குவதற்கான முயற்சியையும் துவங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.