உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சந்தை மதிப்பு ரூ.8.30 லட்சம் கோடியை எட்டியது

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சந்தை மதிப்பு ரூ.8.30 லட்சம் கோடியை எட்டியது

புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சந்தை மதிப்பு, நேற்று 100 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் 8.30 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. இதன் வாயிலாக, 8.30 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய, நாட்டின் ஆறாவது நிறுவனமானது, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி. நேற்று வர்த்தக நேர முடிவில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட 8.47 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் வங்கியின் பங்கு ஒன்றின் விலை, 2.90 சதவீதம் அதிகரித்து 1,204 ரூபாயாக நிறைவடைந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு முன்னதாக, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், டி.சி.எஸ்., இன்போசிஸ், எச்.டி.எப்.சி., வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், இந்த மைல்கல்லை எட்டியுள்ளன. எனினும், இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 6.39 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சந்தை மதிப்பு

கடந்து வந்த பாதை அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் எட்டிய தேதி25 பில்லியன் 2.08 லட்சம் கோடி ஜூலை 6, 200750 பில்லியன் 4.15 லட்சம் கோடி டிசம்பர் 31, 202075 பில்லியன் 6.23 லட்சம் கோடி அக்டோபர் 25, 2021100 பில்லியன் 8.30 லட்சம் கோடி ஜூன் 25, 2024


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


துளிகள்

10 hour(s) ago  




அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை