உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கிரெடிட் கார்டு மூலம் வருமான வரி

கிரெடிட் கார்டு மூலம் வருமான வரி

வருமான வரி செலுத்தும் பொறுப்பு கொண்டவர்கள் வருமான வரித்துறை இணையதளம் வாயிலாக, 'கிரெடிட் கார்டு' மூலம் வரி செலுத்துவதன் வாயிலாக பலவித பலன்களை பெறலாம்.வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் இந்த மாதம் இறுதியுடன் முடிகிறது. வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்வதற்காக வருமான வரித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. வரி செலுத்த வேண்டிய நிலை இல்லை என்றாலும், முறையாக வருமான கணக்கு தாக்கல் செய்வதன் மூலம் பலவித பலன்களை பெறலாம்.வருமான வரித்துறை இணையதளம் வரித் தாக்கல் தொடர்பாக பல வசதிகளை அளிக்கிறது. இதன் மூலம் கிரெடிட் கார்டு வாயிலாக வரி செலுத்தலாம். குறித்த நேரத்தில் வரி செலுத்துவதோடு, வேறு பல அனுகூலங்களையும் இதன் மூலம் பெறலாம்.கார்டு மூலம் வரி செலுத்தும் போது வரி செலுத்தியதற்கான உறுதியை உடனடியாக பெறலாம். மேலும், தாமத கட்டணம், அபராதம் போன்றவற்றையும் தவிர்க்கலாம். அதோடு, பரிசுப் புள்ளிகள், சலுகைகள் போன்ற பலன்களை பெறலாம். குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகள் இந்த வகை பலன்களை அளிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி