உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 4 லட்சம் ஸ்கூட்டர்கள் திரும்ப பெறும் சுசூகி

4 லட்சம் ஸ்கூட்டர்கள் திரும்ப பெறும் சுசூகி

புதுடில்லி:இக்னிஷன் காயிலில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக, நான்கு லட்சம் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது, 'சூசுகி மோட்டார் சைக்கிள்ஸ்' நிறுவனம். கடந்த 2022 ஏப்ரல் 30 முதல் டிச., 3ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 'ஆக்சிஸ் 125, பர்க்மேன் 125, அவெனிஸ் 125' ஆகிய ஸ்கூட்டர்கள் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன.இது ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள சுசூகி நிறுவனம், வாகன உரிமையாளர்கள், அருகில் உள்ள சுசூகி சேவை மையத்தை நாடி, உதிரிபாகத்தை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mariappan Mariappan
ஜூலை 30, 2024 19:57

படு மோசமான தயாரிப்பு. என்னுடைய அக்சஸ் 125 வெஹிகிள் அடிக்கடி fuel bump repair


gokul srini
ஜூலை 29, 2024 18:29

சூப்பர்


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி