மேலும் செய்திகள்
உலகளாவிய நிறுவனங்களை இந்தியர்களால் உருவாக்க முடியும்
21 hour(s) ago
சீன சோலார் உதிரிபாகம்: வரி விதிக்க விசாரணை
21 hour(s) ago
எண்கள்
21 hour(s) ago
ஜி.எஸ்.டி., புகார் மீது தீர்வு காண குழு
01-Oct-2025
சென்னை: “இந்தியாவில் உணவு பதப்படுத்தும் தொழில் உட்பட பல துறைகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது,” என, மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் துறை செயலர் அனிதா பிரவீன் தெரிவித்தார்.மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை மற்றும் தென் மாநில தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சார்பில், 'உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான பாதை' கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.அதில், செயலர் அனிதா பிரவீன் பேசியதாவது: மத்திய அரசு, உணவு பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துகிறது. அதில் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முன்னணி
உணவு பதப்படுத்தும் தொழிலில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. இந்த துறை மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. நகரமயமாக்கல், தமிழகத்தில் அதிகம் உள்ளது.நாட்டில், ஜவுளித் தொழிலுக்கு அடுத்து, அதிக வேலைவாய்ப்புகளை உணவு பதப்படுத்தும் தொழில் உருவாக்குகிறது. ஊக்குவிப்பு
இந்த தொழிலில் சிறு, குறு நடுத்தரம் என, மூன்று பிரிவு தொழில் நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன. உலக உணவு தொழிலின் மையமாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.டில்லியில் உணவு தொழிலுக்கான மிகப்பெரிய கண்காட்சி, செப்., 19ம் தேதி முதல், 20ம் தேதி வரை நடக்கிறது. இதில், 24 மாநிலங்கள், 16 நாடுகளின் பிரதிநிதிகள் என, பலர் பங்கேற்கின்றனர். மேலும், உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு கண்காட்சிகள் இடம்பெறுவதுடன், அரசு திட்டங்களும் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், உணவு பதப்படுத்தும் திட்டத்தின் தமிழக முதன்மை திட்ட அலுவலர் நந்தகுமார், தென் மாநில தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
01-Oct-2025