உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஜூனில் 2.56% அதிகரிப்பு

நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஜூனில் 2.56% அதிகரிப்பு

புதுடில்லி: கடந்த ஜூன் மாதத்துக்கான நாட்டின் சரக்கு ஏற்றுமதி, 2.56 சதவீதம் அதிகரித்து, 2.92 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, வர்த்தகத்துறை செயலர் சுனில் பர்த்வால் தெரிவித்துள்ளார்.பொறியியல் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள், காபி, கரிம மற்றும் கனிம ரசாயனங்களின் ஏற்றுமதி அதிகரிப்பு இதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:கடந்தாண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஜூன் மாதம், நாட்டின் சரக்கு ஏற்றுமதி 2.56 அதவீதம் அதிகரித்து, 2.92 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி 5 சதவீதம் அதிகரித்து, 4.66 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இதன் காரணமாக, வர்த்தகப் பற்றாக்குறை 1.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி, இறக்குமதி, வர்த்தக பற்றாக்குறை மூன்றுமே சரிந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த சரக்கு மற்றும் சேவைகள் துறையின் ஏற்றுமதி, கிட்டத்தட்ட 16.60 லட்சம் கோடி ரூபாயை எட்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இதேபோன்ற நிலை தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த ஏற்றுமதி முதல் முறையாக 66 லட்சம் கோடி ரூபாயை கடக்கும்.நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியில் பொறியியல் பொருட்கள், மின்னணுவியல், மருந்துகள், ஜவுளி போன்ற துறைகளில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. உலகளவில் பணவீக்கம் குறைந்து, வளர்ச்சி தொடரும்பட்சத்தில், வர்த்தகமும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.சரக்கு வர்த்தகப் இறக்குமதி பற்றாக்குறை2023 ஜூன் 2.85 4.44 1.592024 ஜூன் 2.92 4.66 1.74(ரூ.லட்சம் கோடியில்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ