உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

சேமிப்பு மற்றும் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சலுகைகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என சராசரி மக்கள் எதிர்பார்ப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.பட்ஜெட் தொடர்பாக மக்களின் எதிர்பார்ப்பை அறியும் வகையில் லோக்கல் சர்கிள் அமைப்பு நாடு தழுவிய அளவில் கருத்துகளை கோரியிருந்தது. இதில் பங்கேற்றவர்களில் 48 சதவீதம் பேர், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தங்கள் ஆண்டு வருமானம் மற்றும் சேமிப்பு விகிதம் குறையும் என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு சேமிப்பு 25 சதவீதம் குறையும் என எதிர்பார்ப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். வருமானம் குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் ஏழு சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். வாழ்வாதார செலவுகள் உயர்வு மற்றும் இதர செலவுகள் அதிகரிப்பு இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. வீட்டு வசதி, கல்வி, வாகனம் என பல்வேறு பயன்பாட்டிற்காக கடன் பெறுவதும் ஒரு காரணமாகிறது.எனவே, வருமான வரி சலுகை அல்லது வரி விலக்கு வரம்பு உயர்வு போன்ற சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என இவர்களில் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை