உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டிட்கோ பின்டெக் சிட்டி யில் 13 மனைகள் விற்பனைக்கு ரெடி

டிட்கோ பின்டெக் சிட்டி யில் 13 மனைகள் விற்பனைக்கு ரெடி

சென்னை:தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம், சென்னை, நந்தம்பாக்கத்தில், உலகத்தரத்தில், பின்டெக் சிட்டி' எனப்படும் நிதிதொழில்நுட்ப நகரத்தை அமைத்து வருகிறது.மொத்தம், 110 ஏக்கர். திட்ட செலவு 200 கோடி ரூபாய். இந்நகரத்தில், உலகத்தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நிதி நிறுவனங்கள், வங்கிகள், நிதி தொடர்பான சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நிலம் வழங்கப்பட உள்ளது. அந்த நிலத்தில், நிறுவனங்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப, கட்டடங் களை கட்டிக் கொள்ளலாம். முதல் கட்டமாக, 56 ஏக்கர் மேம்படுத்தப்பட்டு, உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக, 36 ஏக்கர் தொழில் மனைகள், 99 ஆண்டிற்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது.அதன்படி, தற்போது தொழில் மனைகளை குத்தகைக்கு விடும் பணியில் டிட்கோ ஈடுபட்டுள்ளது. அதிக விலை கிடைக்க, 'பார்வார்டு ஆக் ஷன்' எனப்படும் ஏல முறை பின்பற்றப்படுகிறது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில், நந்தம் பாக்கத்தில் நிலத்தின் மதிப்பு மிகவும் அதிகம். எனவே, நிதிநுட்ப நகரத்தில் உள்ள தொழில்மனைகள், அதிக விலை வழங்கும் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்படும். முதல் கட்டமாக, 1.50, 2 ஏக்கர் என்ற வீதத்தில், 13 மனைகள் விற்கப்பட உள்ளன. ஒரு ஏக்கருக்கு, 35 கோடி ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இணையதள ஏல டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனம், விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதில் தேர்வாகும் நிறுவனங்கள் விலை புள்ளி சமர்ப்பிக்க வேண்டும். டெண்டர் கடைசி நாளன்று, நிர்ணயித்துள்ள விலையை விட, ஏல முறையில் அதிக விலை கேட்கும் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்படும். நிலத்தை, 'டெவலப்பர்' வாங்கினால், கட்டடம் கட்டி, நிதி சேவையில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே வாடகைக்கு விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ஒரு ஏக்கருக்கு விலை 35 கோடி ரூபாயாக நிர்ணயம். ஏல முறையில் அதிக விலை கேட்கும் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ