உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த டிசம்பரில் 16% சரிவு

சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த டிசம்பரில் 16% சரிவு

புதுடில்லி:கடந்த டிசம்பரில், கச்சா பாமாயில் விற்பனை குறைந்ததால், சமையல் எண்ணெய் இறக்குமதி 16 சதவீதம் குறைந்து, 13.07 லட்சம் டன்னாக இருந்ததாக, எஸ்.இ.ஏ., எனும் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, இந்த சங்கம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது: கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விற்பனை குறைந்ததால், கடந்த டிசம்பரில், இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆண்டைவிட 16 சதவீதம் குறைந்து, 13.07 லட்சம் டன்னாக குறைந்து உள்ளது. முந்தைய ஆண்டில் இறக்குமதி 15.56 டன்னாக இருந்தது.சமையல் எண்ணெய் பிரிவில், கச்சா பாமாயில் இறக்குமதி 8.44 லட்சம் டன்னில் இருந்து, 6.20 லட்சம் டன்னாக குறைந்து உள்ளது.அதேபோல், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விற்பனை 2.56 லட்சம் டன்னில் இருந்து 2.52 லட்சம் டன்னாக குறைந்துஉள்ளது. இருப்பினும், மதிப்பீட்டு காலத்தில், கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 1.94 லட்சம் டன்னில் இருந்து 2.61 டன்னாக அதிகரித்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை