மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
15 minutes ago
50 நாடுகளுடன் வர்த்தக பேச்சு
20 minutes ago
20% வளர்ச்சி காணும் இந்திய சுற்றுலா துறை
23 minutes ago
புதுடில்லி : கணிப்புகளை எல்லாம் விஞ்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது காலாண்டான, கடந்த ஜூலை - செப்டம்பரில் 8.20 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து தேசிய புள்ளிவிபர அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: * நடப்பு நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில் ஜி.டி.பி., வளர்ச்சி 8.20 சதவீதம் *கடந்த 6 காலாண்டுகளில் தற்போது அடைந்துள்ள வளர்ச்சி தான் மிக அதிகம் *முந்தைய காலாண்டான ஏப்., - ஜூனில் இது 7.80 சதவீதமாக இருந்தது *கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 5.60 சதவீதம் மட்டுமே * கணிப்புகளை தாண்டிய இந்த வளர்ச்சியில், நுகர்வோர் செலவழிப்பின் பங்கு 57 சதவீதம் அமெரிக்க வரிவிதிப்பு அதிகரிப்பு, அதைத் தொடர்ந்த ஜி.எஸ்.டி., குறைப்பு இதில் பிரதிபலித்துள்ளது * அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கத்தை, உள்நாட்டு நுகர்வு கணிசமாக தணித்திருப்பது புள்ளிவிபரத்தில் தெரிந்தது * கடந்த 2024, ஜூலை - செப்., காலாண்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி 7.20 சதவீதம்; தற்போது அது 9.10 சதவீதம் * சில்லரை விலை பணவீக்கம் 0.25 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், ஜி.டி.பி., வளர்ச்சி அபார உயர்வு பணவீக்கம் சரிவு, ஜி.டி.பி., உயர்வால், கடன் வட்டியை ரிசர்வ் வங்கி மேலும் குறைக்க வாய்ப்பு
15 minutes ago
20 minutes ago
23 minutes ago