உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவின் மீன் நுகர்வு 15 ஆண்டுகளில் 81% உயர்வு

இந்தியாவின் மீன் நுகர்வு 15 ஆண்டுகளில் 81% உயர்வு

புதுடில்லி:கடந்த 2005 முதல் 2021 வரையான காலத்தில், இந்தியாவின் மீன் நுகர்வு, 81 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'வேர்ல்டுபிஷ்' நிறுவனம், சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பிற அரசு அமைப்புகள், இந்தியாவின் மீன் நுகர்வு குறித்து ஆய்வு ஒன்று நடத்தின. அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் ஆண்டு தனிநபர் மீன் நுகர்வு, கடந்த 2005ல், 4.90 கிலோவாக இருந்தது. இது 2021ல், 81 சதவீதம் அதிகரித்து, 8.89 கிலோவாக உள்ளது. அதேபோல், அதிகம் மீன் உண்ணும் மக்கள் கொண்ட மாநிலங்களில், ஆண்டு தனிநபர் மீன் நுகர்வு, 7.43 கிலோவில் இருந்து, 66 சதவீதம் அதிகரித்து 12.33 கிலோவாக உள்ளது. இதே காலகட்டத்தில், இந்தியாவின் மீன் உற்பத்தியும், இரு மடங்கு உயர்ந்து, 141.64 லட்சம் டன்னாக உள்ளது.உணவு முறை மாற்றம் மற்றும் அதிகரிக்கும் வளமை காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவின் மீன் உண்ணும் மக்கள்தொகை, 66 சதவீதத்தில் இருந்து 72.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- ஹிமான்ஷூ பதாக், இயக்குனர் ஜெனரல், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்உலகளாவிய மக்கள் தொகை வளர்ச்சியை விடவும், மீன் நுகர்வு வேகமாக உள்ளது. அதிகரிக்கும் வருவாய், ஆரோக்கிய நன்மை குறித்த விழிப்புணர்வு மற்றும் நகர்ப்புற தட விரிவாக்கம் ஆகியவையே இதற்கு காரணம். மீன்களுக்கான தேவை இந்தியாவில் அதிகமாக உள்ளது. அளவின் அடிப்படையில், இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய மீன் நுகர்வு நாடாக உள்ளது. எனினும், இந்தியாவின் தனிநபர் மீன் நுகர்வு, உலகளாவிய சராசரியை விட குறைவாக உள்ளது.- ஹிமான்ஷூ பதாக், இயக்குனர் ஜெனரல், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்உள்நாட்டு நுகர்வு:ஆண்டு சதவீதம்இறக்குமதி:ஆண்டு அளவு(டன்களில்)அதிகம் மீன் உண்ணும் மாநிலங்கள்:குறைந்தளவு மீன் உண்ணும் மாநிலங்கள்:

2005-2006 82.36

2015-2016 86.22019-2 020 83.652005-2006 14,0002019-2020 76,000அதிக மீன் நுகர்வோர்கள் திரிபுரா (99.35%)குறைந்தளவு மீன் நுகர்வோர்கள் ஹரியானா(20.55%)தமிழகம்கேரளா (90 சதவீதத்துக்கும் மேல்)கோவாபஞ்சாப்ஹரியானா (30 சதவீதத்துக்கும் குறைவு)ராஜாஸ்தான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி