உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  நிறுவனங்களின் சிறு பிழைகளுக்கு கிரிமினல் நடவடிக்கை இல்லை ஜன் விஸ்வாஸ் சட்டத்திருத்தம்: கோயல் விளக்கம்

 நிறுவனங்களின் சிறு பிழைகளுக்கு கிரிமினல் நடவடிக்கை இல்லை ஜன் விஸ்வாஸ் சட்டத்திருத்தம்: கோயல் விளக்கம்

புதுடில்லி:ஜன் விஸ்வாஸ் சட்டத்தின் மூன்றாவது வரைவுக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். உள்ளூர் வர்த்தகர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்ததாவது: தொழில் நிறுவனங்கள் செய்யும் சிறு பிழைகளுக்கு கூட கிரிமினல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்டங்களை நீக்குவதற்காகவே ஜன் விஸ்வாஸ் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, இதுவரை 275 முதல் 300 சட்டப்பிரிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள குற்றவியல் தண்டனை நடைமுறைகள் நீக்கப்பட உள்ளன. ஜன் விஸ்வாஸ் சட்டத்தின் மூன்றாம் பதிப்புக்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வர்த்தகர்களும் மாற்ற வேண்டிய சட்டப்பிரிவுகளைக் கண்டறிந்து, அமைச்சகத்திடம் தெரிவிக்கலாம். தற்போது அறிமுகமாகியுள்ள 4 தொழிலாளர் சட்டங்களும் எளிதில் தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். *தொழில் துறையினரின் சிறு தவறுகளை கிரிமினல் குற்றமாக்கும் சட்டப்பிரிவுகளை நீக்குகிறது. *இதன் முதல் வடிவம் 2023ல் அமலானபோது 42 சட்டங்களின் 183 பிரிவுகள் கண்டறியப்பட்டன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை