உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இ - வே பில் புதிய கட்டுப்பாடு

இ - வே பில் புதிய கட்டுப்பாடு

புதுடில்லி:வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல், வணிகங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு, இ - இன்வாய்ஸ் எனும் மின்னணு விலைப்பட்டியல் தகவல்களை இணைக்காமல், 'இ - வே' பில்களை வழங்க முடியாது என, தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது. ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் உள்ள வணிகங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி., நடைமுறையின் படி, 50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கான, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு, இ - வே பில் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தேசிய தகவல் மையம் தெரிவித்து உள்ளதாவது:இ - இன்வாய்சுக்கு தகுதியான வரி செலுத்துவோர் கூட, வணிகங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் மற்றும் ஏற்றுமதி பரிவர்த்தனைகளுக்கு, இ - இன்வாய்ஸ் இணைக்காமல் இ - வே பில்களை வழங்குகின்றனர். இதன் காரணமாக பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுவிடுகின்றன. இதனால் வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல், இந்த இரு பரிவர்த்தனைகளுக்கும் இ - இன்வாய்ஸ் இல்லாமல் இ - வே பில் வழங்க அனுமதி வழங்கப்படாது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி