உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ரிலையன்ஸ் ரூ.11,760 கோடி தமிழகத்தில் முதலீடு

 ரிலையன்ஸ் ரூ.11,760 கோடி தமிழகத்தில் முதலீடு

சென்னை: தமிழகத்தில், பயோ எனர்ஜி எனப்படும் உயிரி எரிசக்தி துறையில் 11,760 கோடி ரூபாய் முதலீடு செய்ய 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் மாநில அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'டி.என்.,ரைசிங்' முதலீட்டாளர் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை மையப்படுத்தி இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 7,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் துாய எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும், வீட்டு உபயோகம் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கும் இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை