உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஒரு லட்சம் கோடியை தாண்டிய உரிமை கோரப்படாத சொத்துகள்

 ஒரு லட்சம் கோடியை தாண்டிய உரிமை கோரப்படாத சொத்துகள்

வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களிடம் மொத்தம் 1.04 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உரிமை கோரப்படாமல் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இவற்றை உண்மையான உரிமையாளர்களிடம் திருப்பி வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருவதாக தெரிவித்தார். நாடு முழுதும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடம் 1.04 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உரிமை கோரப்படாமல் உள்ளன. இவை அனைத்தும், ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களுக்குச் சொந்தமானவை. இவற்றை திருப்பி வழங்க மத்திய அரசு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. தற்போது வரை, 500க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், உண்மையான உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளன. இது நிதி நடவடிக்கையை தாண்டி, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கை. - நரேந்திர மோடி, பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை