மேலும் செய்திகள்
துளிகள்
9 hour(s) ago
எண்கள்
9 hour(s) ago
சிப் வினியோகத்தில் சிக்கல் ஸ்மார்ட்போன் விலை உயரும்
9 hour(s) ago
ஆழியாறு மின் திட்டம் ஆலோசகருக்கு டெண்டர்
9 hour(s) ago
3,500 பேரை புதிதாக பணியமர்த்தும் எஸ்.பி.ஐ.,
27-Oct-2025
புதுடில்லி : ஜப்பானை சேர்ந்த சோனி குழுமத்தின் 'சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா' நிறுவனம், 'ஜீ என்டர்டெய்ன்மென்ட் என்டர்பிரைசஸ்' நிறுவனத்துடனான 83,000 கோடி ரூபாய் மதிப்பிலான இணைப்பு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. அத்துடன் ஒப்பந்த நிபந்தனைகளை மீறியதாக கூறி, கிட்டத்தட்ட 748 கோடி ரூபாய் இழப்பீடும் கோரியுள்ளது.சோனி பிக்சர்ஸ் தற்போது 'கல்வர் மாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட்' என்ற பெயரில் இயங்கி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, இந்நிறுவனம் ஜீ நிறுவனத்துடன், இரண்டாண்டு காலக்கெடுவுடன் கூடிய இணைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக தற்போது ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக சோனி அறிவித்துள்ளது.தங்கள் மீதான சோனியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜீ நிறுவனம், இணைப்புக்கான அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும், சோனி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துஉள்ளது.
செப்டம்பர் 2021: 'சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா' உடன் இணைவதற்கு, 'ஜீ' நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது.பிப்ரவரி 2022: ஜீ நிறுவனத்துக்கு எதிராக, இண்டஸ்இண்ட் வங்கி, திவால் வழக்கை தாக்கல் செய்தது.அக்டோபர் 2022: இந்திய சந்தை போட்டி ஆணையம், இணைவதற்கு ஒப்புதல் அளித்தது.டிசம்பர் 2022: ஐ.டி.பி.ஐ., வங்கி, 149.60 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மீட்பதற்காக, ஜீ நிறுவனத்துக்கு எதிராக தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தை நாடியது.ஆகஸ்ட் 2023: என்.சி.எல்.டி., இணைப்பிற்கு ஒப்புதல் அளித்து, வங்கிகளின் ஆட்சேபனைகளை நிராகரித்தது.நவம்பர் 2023: இணைப்புக்குப் பின், புனித் கோயங்காவுக்கு பதில் என்.பி. சிங், நிறுவனத்துக்கு தலைமை வகிக்க வேண்டும் என சோனி நிறுவனம் நிர்ப்பந்தித்தது.டிசம்பர் 2023: இணைப்பிற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரியது ஜீ. ஜனவரி 22, 2024: இணைப்பு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக, சோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
27-Oct-2025