உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / காப்புரிமை பதிவில் தமிழகம் முதலிடம்

காப்புரிமை பதிவில் தமிழகம் முதலிடம்

புதுடில்லி: கடந்த 2023ம் நிதியாண்டில், தமிழகத்தில் தான் அதிகளவிலான காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டதாக, 'நாஸ்காம்' அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், கடந்த 2023ம் நிதியாண்டில், மொத்தம் 83,000 காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 24.60 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிக காப்புரிமைகள் பதிவு செய்த மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் 9.30 சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மஹாராஷ்டிரா 6.80 சதவீதத்தில் உள்ளது.அறிவுசார் சொத்து உரிமைகளை பதிவு செய்வதில் தமிழகம் முன்னிலை வகிப்பதற்கு, அரசு வழங்கும் மானியம், அதிக முனைவர் பட்டம் கொண்டவர்கள், அதிக எழுத்தறிவு விகிதம் போன்றவை முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கடந்த 2008ம் ஆண்டு முதல், 900க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை பதிவு செய்துள்ளன. இது, புதிய கண்டுபிடிப்புகளுக்கு, நாடு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ