மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
2 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago
பெங்களூரு: ''வரும் நாட்களில், மூச்சு விடுவதற்கு, மக்களிடம் காங்கிரஸ் அரசு வரி வசூலித்தாலும் ஆச்சரியப்பட முடியாது,'' என பா.ஜ., முதன்மை செயலர் சுனில்குமார் தெரிவித்தார்.இது குறித்து, நேற்று பா.ஜ., முதன்மை செயலர் சுனில்குமார் அளித்த பேட்டி:வாக்குறுதி திட்டங்களின் பெயரில், காங்கிரஸ் அரசு, மாநிலத்தை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை, லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்துள்ளது.விலை உயர்வு உத்தரவுக்கு, கையெழுத்து போட்டதன் மூலம், முதல்வர் சித்தராமையா, காலியான கருவூலத்தை நிரப்ப முயற்சிக்கிறார்.வரும் நாட்களில், மக்கள் மூச்சு விடுவதற்கு கூட, காங்கிரஸ் அரசு வரி விதித்தாலும் ஆச்சரியப்பட முடியாது. அரசு அனைத்து வழிகளிலும், மக்களிடம் கொள்ளை அடிக்கிறது. மாநிலத்தின் வருவாய், நாளுக்கு நாள் குறைகிறது. நடப்பாண்டு வரி வசூலில், 13,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட மக்களுக்கு சுமையை ஏற்றுகிறது.எரிபொருள் விலையை குறைக்கும்படி வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களில், பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு, பட்ஜெட்டுக்கு முன்பே, பெட்ரோலியம் மீதான வரியை அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago | 1
8 hour(s) ago | 2
8 hour(s) ago