உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேவந்த் ரெட்டியிடம் பாடம் சித்துவுக்கு அசோக் அறிவுரை

ரேவந்த் ரெட்டியிடம் பாடம் சித்துவுக்கு அசோக் அறிவுரை

கலபுரகி: ''மாநில முதல்வர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் பாடம் கற்று கொள்ளுங்கள்,'' என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக் அறிவுரை கூறி உள்ளார்.கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, தேர்தலில் போட்டியிட்டால் தோற்று விடுவோம் என்று பயம் வந்து விட்டது. இதனால் தேர்தலில் போட்டியிடாமல் விலகி உள்ளார். முதல்வர் பதவிக்காக சிவகுமார், பரமேஸ்வர் வலைவீசி உள்ளனர். ஆப்பரேஷன் தாமரை செய்து, ஆட்சியை கவிழ்க்க பா.ஜ., முயற்சி செய்வதாக, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். அவருக்கு தெரியவில்லை. சொந்த கட்சி தலைவர்களால், அவரது ஆட்சி கவிழ போகிறது என்று.வறட்சி நிவாரணத்தை விடுவிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு மனு செய்துள்ளது. மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வறட்சி வருகிறது. மத்திய குழு வந்து ஆய்வு செய்துவிட்டு சென்ற பின்னர், நிதி விடுவிக்கப்படுகிறது. பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, வறட்சி நேரத்தில் மத்திய அரசு நிதியை எதிர்பார்க்காமல், நாங்களே நிவாரணம் வழங்கினோம்.எங்கள் அரசு வளமாக இருந்தது. காங்கிரஸ் அரசு திவாலாகி உள்ளது. மாநில முதல்வர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று, தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் இருந்து, சித்தராமையா பாடம் கற்று கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை