உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாற்று பாதையில் வெற்றி பெற நினைக்கும் வேட்பாளர்கள்

மாற்று பாதையில் வெற்றி பெற நினைக்கும் வேட்பாளர்கள்

ராம் நகர்: 'பெங்களூரு பட்டதாரி தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பட்டதாரி அல்லாதவர்கள் கூட, பெங்களூரில் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். சில வேட்பாளர்கள், வெற்றி பெற, 'மாற்று பாதையில்' ஈடுபட்டுள்ளனர்,'' என பெங்களூரு பட்டதாரி தொகுதி சுயேச்சை வேட்பாளர் பானுபிரகாஷ் தெரிவித்தார்.ராம்நகரில் நேற்று முன்தினம் அவர் கூறியதாவது:சமுதாயத்தில் பட்டதாரிகளின் பங்கு அதிகம். அவர்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், நமது கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும். இதுவரை இருந்தவர்கள் அதை செய்யவில்லை. வாக்காளர்கள் மீது நம்பிக்கை வைத்து போட்டியிடுகிறேன்.முந்தைய தேர்தலை விட, இம்முறை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பெரிய அரசியல் தலைவர்கள், தங்கள் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர்.இம்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பட்டதாரி அல்லாதவர்கள் கூட, பெங்களூரில் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். சில வேட்பாளர்கள் வெற்றி பெற, மாற்று பாதையில் ஈடுபட்டுள்ளனர்.பட்டதாரிகளின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டால், சுகாதாரம், கல்வி, பணி பாதுகாப்பு, அரசு கல்லுாரிகளில் போட்டி தேர்வு பயிற்சி, ஒப்பந்த பணி நியமனத்தை முறைப்படுத்த போராடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை