உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம்

புதுடில்லி : வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் கூறியவற்றை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.நிலத்தகராறு தொடர்பான ஒரு பிரச்னையில், அவதுாறு வழக்கு தொடரப்பட்டது. இதில் நடவடிக்கை எடுக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு, உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்த, மே, 3ம் தேதி தடை விதித்திருந்தது.அவதுாறு வழக்குஇது தொடர்பான வழக்கு, கடந்த ஜூலை, 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற நீதிபதி ராஜ்பிர் ஷெராவத், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து விமர்சித்தார்.இந்த வழக்கின் விசாரணை, நீதிமன்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பானது.தன் உத்தரவை அறிவித்த பின், 'உச்ச நீதிமன்றம் தன்னை மிகவும் பெரியதாக எண்ணிக் கொள்கிறது. அதே நேரத்தில் உயர் நீதிமன்றங்களை குறைவாக மதிப்பிடுகிறது' என, கருத்து கூறியிருந்தார்.இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து, நீதிபதி மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு இதை விசாரித்தது. அமர்வு கூறியுள்ளதாவது:இந்த விஷயத்தில், உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வின் கருத்துகள் தேவையில்லாத விமர்சனம். இது இரண்டு நீதிமன்றங்களின் கண்ணியத்தையும் குறைப்பதாக அமைந்துள்ளது.நீதியின் முன், அனைத்து நீதிமன்றங்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன. நீங்கள் உயர்ந்தவர், நான் குறைந்தவர் என்பது நீதிமன்றங்களுக்கும், நீதிக்கும் கிடையாது.நீதித்துறையில் சில படிகள் உள்ளன. அதன்படி, உயர் நீதிமன்றத்துக்கு அடுத்த மேல் நிலையில் உச்ச நீதிமன்றம் உள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவது என்பது, உங்களுக்கான வாய்ப்பு அல்ல; அது அரசியலமைப்பு சட்டக் கடமையாகும்.நடவடிக்கை இல்லைஒரு தீர்ப்பின் மீது, அதில் தொடர்புடையவர்களுக்கு அதிருப்தி இருக்கலாம். ஆனால், நீதிமன்றங்களுக்கோ, நீதிபதிகளுக்கோ இருக்கக் கூடாது. தனி நீதிபதியின் கருத்துக்கள் வருத்தம் அளிப்பதாக உள்ளது.நீதித்துறையின் ஒழுக்கத்தை, கண்ணியத்தை அனைவரும் காப்பாற்ற வேண்டும். இதுபோன்று தேவையில்லாத கருத்துகளை, விமர்சனங்களை தெரிவிக்கக் கூடாது.இந்த விஷயத்தில், தனி நீதிபதி நடத்திய விசாரணையின் நேரடி ஒளிபரப்பின் வீடியோக்கள் பரவி வருகின்றன.அவர் கூறிய வார்த்தைகள் நீக்கப்படுகின்றன. இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.அவர் இந்தக் கருத்தை தன் உத்தரவில் எழுத்துப்பூர்வமாக குறிப்பிடவில்லை. வாய்வழியாக தெரிவித்துள்ளார். அதனால், அவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும், அவதுாறு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதே நேரத்தில், இது அனைத்து நீதிபதிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்று மற்றொரு நீதிமன்றத்தின் உத்தரவுகள் குறித்து விமர்சிக்கக் கூடாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

T Manohar
ஆக 08, 2024 21:21

Superior is always Supreme. Then the meaning of subordination declines. Hence, the term respect should be Respected by obeying the higher authority directions and guidance.


Kanns
ஆக 08, 2024 19:19

Instead of Lectures, Start Punish Power Misusing Rulers, Stooge Officials esp Judges,Investigators& Vested False Complainant Gangsters women, SCs, unions/groups, advocates etc etc


DR.V Bhaskar, phd
ஆக 08, 2024 16:44

விமர்சிக்க கூடாது என்பது தவறு


DR.V Bhaskar, phd
ஆக 08, 2024 16:43

இது சரியல்ல


DR.V Bhaskar, phd
ஆக 08, 2024 16:42

விமர்சிக்கலாம், ஆனால் அந்த தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பே இருந்தால்


DRV BhaskarPhD
ஆக 08, 2024 16:17

விமர்சிக்கலாம்


Ravi Kulasekaran
ஆக 08, 2024 12:52

ஏழை மட்டுமே தண்டிக்க படுகிறாரன்


RAMAKRISHNAN NATESAN
ஆக 08, 2024 12:39

தீர்ப்பை விமர்சிக்கலாம் .... தீர்ப்பளித்த நீதிபதியை விமர்சிக்கக் கூடாது ன்னு பொதுவா சொல்லுவார்களே ......


Subramaniam Mathivanan
ஆக 08, 2024 12:17

கடந்த சில மாதங்களாகத் தான் இது போன்று உச்ச நீதி மன்றம் பெரிய அண்ணன் முறையில் நடக்கிறது. தற்போதுள்ள தலைமை நீதிபதி மாறும்போது சரியாகும் என்று நம்புகிறோம்


GMM
ஆக 08, 2024 10:04

தேவையில்லாத கருத்து, விமர்சனம் காரணம் நீதி மன்றம், நிர்வாக ஒழுங்குமுறை பின்பற்றுவது இல்லை. தாசில்தார் கலெக்டரை விமர்சனம் செய்வது இல்லை. மாநில உயர் நீதிமன்றம் எப்படி தேசிய உச்ச நீதிமன்றதை விமர்சிக்கிறது.? முதலில் நீதிமன்றத்தில் சுயமாக பணி, மனு தாக்கல், தீர்ப்பு ஒழுங்குமுறை வகுக்க வேண்டும். அல்லது மத்திய அரசு விதிகள் வகுக்க வழிவிட வேண்டும். படிப்பறிவு மிகுந்த மக்களிடம் தன் விருப்ப விசாரணை முறையை ஏற்க செய்வது கடினம். கோலிஜியம் தவறான தேர்வு முறை. வழக்கறிஞர் வாதம் தான் தீர்ப்பை முடிவு செய்கிறது. வாதிகள் தீர்ப்புக்கு முன் எழுத்து மூல ஆதார மனுக்கள் நேரடியாக அல்லது தபால் மூலம் தாக்கல் செய்ய வாய்ப்பு தேவை. தவறான தீர்ப்பை தடுக்க /முறைப்படுத்த உதவும்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி