உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்து மக்கள் தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: மத்திய அமைச்சர் கிரிராஜ் குற்றச்சாட்டு

ஹிந்து மக்கள் தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: மத்திய அமைச்சர் கிரிராஜ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஹிந்து மக்கள் தொகை குறைந்துள்ளது. முஸ்லீம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலே காரணம்' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.மக்கள் தொகை தொடர்பான பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை குறித்து, கிரிராஜ் சிங் கூறியதாவது: இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் முஸ்லீம் மக்கள் தொகை 14.09 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அனைத்தும் காங்கிரஸ் கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதால் நடந்துள்ளது. காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களின் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்கணும்!

இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களை போலவும், தெற்கில் இருப்பவர்கள் ஆப்ரிக்கர்களை போலவும் உள்ளனர் என காங்கிரஸ் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

venugopal s
மே 09, 2024 22:51

பாஜகவில் நிறையப் பேருக்கு தேர்தல் தோல்வி பயத்தில் மூளை பிசக ஆரம்பித்து விட்டது என்பது அவர்கள் பேச்சிலேயே தெரிகிறது!


முருகன்
மே 09, 2024 22:11

ஓட்டு வாங்க ஊரை ஏமாற்றும் வேலை இது


Azar Mufeen
மே 09, 2024 22:01

அடடா என்ன ஒரு கண்டுபிடிப்பு 1950களில் ஒரு குடும்பத்தில் 15பிள்ளைகள் பெற்றுகொள்வார்கள் இப்போது ஒன்று அல்லது இரண்டு பிள்ளைங்களதான் பெற்றுக்கொள்கிறார்கள் எல்லாமத த்ததவரும்தான் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைய காரணம் ஜாதி பாகுபாடுகள் உடனே இவன் மூர்க்கன் என்று எழுதுவிர்கள் பின்குறிப்பு எந்த மதமா இருந்தாலும் கடவுளை பார்க்க முடியாது செத்தத்துக்கப்புறம்தான் பார்க்க முடியுமாம்


thanjai NRS krish
மே 10, 2024 10:01

ஜாதி பாகுபாட்டினால் இந்து மக்கள் தொகை குறைந்து விட்டதாம் என்ன அரிய கண்டுபிடிப்புஉங்கள் மதத்தில் எத்தனை ஜாதிகள் உட்பிரிவுகள் உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்


Jai
மே 09, 2024 21:20

இந்து மக்கள்தொகை குறைவதற்கு காரணம் சிறுபான்மையினர் அதிகப்படியான குழந்தைகள் பெற்று கொள்வது மற்றும் மதமாற்றம். மதமாற்றத்தினால் அவர்களின் இந்தியபற்றும் மட்டுபடுத்தப்பட்டு அந்தந்த மதங்களுக்கான நாடுகளை புகழ்வது. பக்கத்தில் இருக்கும் பிச்சையெடுத்து ஆட்சி நடத்தும் நாட்டை பெருமையாக பேசுவது, அந்த நாட்டுக்காரன் என்று பெருமையாக கூறி கொள்வது. இதுதான் நாட்டிற்கு பிரச்சினை. இப்படி ஒரு நிலைமைக்கு காரணம் காங்கிரஸ்தான். பாஜக வெளிநாடுகளிலிருந்து மதமாற்றத்திற்காக வரும் பணத்தினை சற்று தடுத்து நிறுத்தி உள்ளனர்.


தஞ்சை மன்னர்
மே 09, 2024 20:43

அட பாவத்த இன்னுமா காங்கிரஸ் கதை முடிந்த பாடில்லை ஹிந்துக்கள் மக்கள் தொகை குறைவுக்கும் முஸ்லீம் மக்களின் மக்கள் தொகை குறைவுக்கும் காரணம் கண்டுபிடித்த உங்க அறிவில் தீயை வைக்க போல போல முட்டாள்களை பேசவிட்டு வேடிக்கை காட்டும் பி சே பி யின் நடவக்கை கீழ்த்தரமாக போய் கொண்டு இருக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணமே போதும் ஆட்சி நடத்த லாயக்கு இல்லாத கும்பல் பத்து வருஷம் ஆட்சியில் இந்தியாவை வருஷம் பின் நோக்கி செல்லவைத்த கும்பல் இந்த ஊழல் கும்பல்


Ramesh Sargam
மே 09, 2024 20:12

திமுக மற்றொரு காரணம்


ES
மே 09, 2024 23:12

Did they rule the country? No


Syed ghouse basha
மே 09, 2024 19:58

பலே பலே சூப்ரா நாடு உருப்பட்டுறும் இப்படி தான் மோத விடனும்


Kumar Kumzi
மே 09, 2024 20:59

ஐரோப்பிய நாடுகளை போயி பார் காரி துப்புறாங்க


Francis
மே 09, 2024 19:51

தவறான கருத்துக்களை தவறான நோக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது கடந்த ஆண்டுகளில் இந்துக்களின் மக்கள்தொகை குறையவில்லை மாறாக தமிழர்கள், மலையாளிகள் மற்றும் தெலுங்கர்களின் மக்கள் தொகை சதவீதம் தான் குறைந்துள்ளது உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மக்கள் தொகை மத வேறுபாடின்றி ஏறத்தாழ ஒரே சீராக உயர்ந்துள்ளது இந்திய அரசு மாநிலம் வாரியாக மத அடிப்படையிலான மற்றும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை உயர்வு மற்றும் குறைவு சதவீதங்களை வெளியிடத் தயாரா???


Kumar Kumzi
மே 09, 2024 21:05

தெரு தெருவா பைபில் விற்று மத மாற்றுவது யாருனு சொல்லு மதமாரியே


Narayanan Muthu
மே 09, 2024 19:41

பத்தாண்டுகளாக பாஜக குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது என இந்த கிரிராஜ் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார் உபயோகமற்றவர்கள்.


அப்புசாமி
மே 09, 2024 18:53

மக்கள் தொகையை அவிங்க அதிகமாக்கி அதிகமாக்கி நம்மளை பாகிஸ்தான் லெவலுக்கு கொண்டு வராம ஓயமாட்டாங்க.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை