உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் காங்கிரசை கை கழுவும் தலைவர்கள்: தலைமைக்கு தலைவலி

டில்லியில் காங்கிரசை கை கழுவும் தலைவர்கள்: தலைமைக்கு தலைவலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் கட்சியில் இருந்து வெளியேறினர். சமீபத்தில் டில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பதவியை ராஜினாமா செய்தார். டில்லியில் காங்கிரசை தலைவர்கள் அடுத்தடுத்து கை கழுவி வருவதால், தலைமைக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. டில்லியில் ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிகள் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கை கழுவும் தலைவர்கள்

பல்வேறு ஊழல் சிக்கி உள்ள ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு டில்லி காங்., தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. சமீபத்தில் அர்விந்தர் சிங் லவ்லி, தன் டில்லி காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தங்கள் விருப்பத்திற்கு எதிராக ஆம் ஆத்மியுடன் கட்சி தலைமை கூட்டணி அமைத்ததை தன் ராஜினாமாவுக்கான காரணங்களில் ஒன்றாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்த இரண்டு பேரும் டில்லியில் இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கு பார்வையாளர்களாக இருந்தனர்.

தலைமைக்கு தலைவலி

நீரஜ் பசோயா மற்றும் நசீப் சிங் ஆகிய இரு தலைவர்களும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எழுதிய கடிதங்களில், கட்சிகளை விட்டு வெளியேறியதற்கு, காரணம் ஊழல் செய்து வரும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி வைத்திருப்பது தான் என குறிப்பிட்டுள்ளனர். அடுத்தடுத்து நிர்வாகிகள் ராஜினாமா, காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

மே 25ம் தேதி தேர்தல்

டில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கட்சியில் இருந்து இரண்டு தலைவர்கள் வெளியேறியது குறித்து டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. டில்லி உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் மே 25ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

krishna
மே 01, 2024 17:32

SEMMA COMEDY.


அருண் பிரகாஷ் மதுரை
மே 01, 2024 16:54

இன்றைக்கு கெஜ்ரிவால் சிறை சென்றதற்கு காரணமான மதுபான கொள்கை ஊழல் குற்றச்சாட்டை முதன் முதலாக கூறியதே காங்கிரஸ்தான்.அப்புறம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கோபம் கொள்ள மாட்டார்களா. இப்போ ஏன் அவரைக் கைது செய்தீர்கள் என்று போராட்டம் வேறு.இதைவிட பித்தலாட்டம் இருக்க முடியாது.நீங்கள் ஒரு கட்சியா ...டியும் கொடுப்பீர்கள் .அப்புறம் .... கொடுப்பீர்களா என்று உள்ளூரில் பேசி இருப்பார்கள்.


V GOPALAN
மே 01, 2024 16:39

Next Prime Minister


duruvasar
மே 01, 2024 14:34

திராவிட செம்மல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மற்றும் டார்ச் லைட் மய்ய நாயகனையும் கூப்பிட்டு டில்லியில் பிராச்சாரம் செய்ய வையுங்கள் ஈசியாக மீதி சோலியையும் முடித்துவிடுவார்கள்


Duruvesan
மே 01, 2024 14:29

இதுக்கீலாம் ஒரே தீர்வு விடியல் பிரதமர் ஆனால் மட்டுமே சாத்தியம்


Ramesh Sargam
மே 01, 2024 13:11

கை சின்னத்தில் இருப்பவர்களே கை கழுவ ஆரம்பித்துவிட்டனர் காங்கிரஸ் இனி சரித்திரம்தான் காங்கிரஸ் ஒழிந்தது இதேபோல், கம்யூனிஸ்ட்ஸ், திமுகவும் ஒழியவேண்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை