மேலும் செய்திகள்
தவறுக்கு துணை போனது கிடையாது : சொல்கிறார் அஜித் பவார்
44 minutes ago
ஷிவமொகா : சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதில் உறுதியாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, நேற்று தேர்தல் அலுவலகம் திறந்தார்.பா.ஜ., மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவுக்கு, 2023 சட்டசபை தேர்தலில் சீட் கொடுக்கவில்லை. தன் மகன் காந்தேஷுக்கு சீட் கிடைக்கும் என, எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. லோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் மகனுக்கு சீட் கேட்டு மன்றாடினார். பசவராஜ் பொம்மைக்கு பா.ஜ., மேலிடம் சீட் கொடுத்தது.கொதிப்படைந்த ஈஸ்வரப்பா, தன் மகனுக்கு சீட் கை நழுவ முன்னாள் முதல்வர்எடியூரப்பாவே காரணம் என, குற்றஞ்சாட்டினார். அவரது மகன் ராகவேந்திராவை எதிர்த்து, ஷிவமொகா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்க தயாராகிறார்.இவரை சமாதானம் செய்ய, பா.ஜ., தலைவர்கள் முயற்சித்தும் பயனில்லை. ஷிவமொகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். இவரது நிகழ்ச்சியிலும் ஈஸ்வரப்பா பங்கேற்கவில்லை.இந்த நிலையில், தேர்தல் பணிகளுக்காக, ஷிவமொகாவில் நேற்று புதிய அலுவலகம் திறந்தார். இந்த அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி பெயரில் திறந்துள்ளார். பிரதமரின் படத்தையும் பயன்படுத்தியுள்ளார். இது எடியூரப்பாவுக்கும், ராகவேந்திராவுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
44 minutes ago