உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ

மாயாபுரி: மேற்கு டில்லி மாயாபுரியில் உள்ள தொழிற்சாலையில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது.மாயாபுரி பகுதியில் பிளாஸ்டிக் மோல்டிங் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் காலை 9:40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.முதல் தளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை