உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டாயம் நிறுத்துங்க!: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா கோபம்

கட்டாயம் நிறுத்துங்க!: காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: ரபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில், 45 பேர் உயிரிழந்தனர். இதற்கு, ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடந்த எட்டு மாதங்களாக போர் நடந்து வருகிறது. நேற்று(மே 27) தெற்கு காசாவில் உள்ள ரபா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு மழைகளை பொழிந்தது. இந்த திடீர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகினர்; 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இது தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பேசும் தமிழன்
மே 28, 2024 20:04

எதுக்கு ஹமாஸ் அமைப்பு... மறுபடியும் தாக்குதல் நடத்தவா.... அப்படி நடந்தால்.... அதற்க்கு யார் பொறுப்பு ???


Nagarajan D
மே 28, 2024 18:56

ஐ நா ஒரு டம்மி கூட்டம் இஸ்லாமிய தீவிரவாத ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய போது வாயில் என்ன வைத்திருந்தது? இஸ்லாமியர்களின் வெடிகுண்டு இருந்ததா? ஏண்டா அடிக்குறவன ஒன்னும் சொல்லமாட்டீங்க திருப்பி அடித்தால் தவறு என்று சொல்லுவீங்களா? உலகத்திலேயே ஒரு கூந்தலுக்கும் உபயோகமில்லாத அமைப்பு இந்த ஐ நா


Sivak
மே 28, 2024 17:22

ஆமாம் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஒன்னும் சொல்லவில்லையே .... இவனும் அந்த குரூப்பை சேர்ந்தவனா இருக்கலாம் ... இஸ்ரேல் விடக்கூடாது ஒரு தீவிரவாதி இருக்கும் வரை விடக்கூடாது ஒழித்து கட்ட வேண்டும் ...


தமிழ்வேள்
மே 28, 2024 14:55

பிணை கைதிகளை விடுவிக்கவேண்டும் - ராக்கெட் வீச்சு, பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று பாலஸ்தீன பயங்கரவாத இயக்கங்களிடம் கோபம் கொண்டு உத்தரவிட ஐநாவுக்கு தைரியம் -தில் இருக்கிறதா ?


Swaminathan Nath
மே 28, 2024 13:42

காசாவில் மக்கள் எல்லோரும் அகதிகளாக இருக்கிறார்கள், இதற்கு காரணம், அங்குள்ள தீவிரவாத அமைப்பு இஸ்ரேலை தாக்கியது, இதை உணராமல், தீவிரவாதிகள் பிணைய கைதிகளை விடுவிக்காமல் இருக்கிறார்கள், இதை பற்றி UN பேசவே இல்லை, தீவிரவாதிகள் இஸ்ரேலை தாக்குவதையும் நிறுத்த சொல்லவில்லை ஆனால் இஸ்ரேல் மட்டும் தாக்குதலை நிறுத்த வேண்டுமாம், இது எந்த ஊர் நியாயம்


visu
மே 28, 2024 12:33

ஹாஹா தீவிரவாதிகள் பிணைய கைதிகளை விடுவிக்காமல் இருப்பத un பேசவே இல்லை இஸ்ரயேலை தாக்குவதையும் நிறுத்த சொல்லவில்லை ஆனால் இஸ்ரேல் மட்டும் தாக்குதலை நிறுத்த வேண்டுமாம் பலஸ்தீனர்கல் பாவமாம் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது UN எங்கே சென்றது தெரியவில்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை