உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமண பந்தத்தின் அடித்தளம் சகிப்புத்தன்மை : உச்ச நீதிமன்றம்

திருமண பந்தத்தின் அடித்தளம் சகிப்புத்தன்மை : உச்ச நீதிமன்றம்

புதுடில்லி, 'சகிப்புத் தன்மை, அனுசரிப்பு, பரஸ்பர மரியாதை ஆகியவை நல்ல திருமண பந்தத்தின் அடித்தளம்; அற்ப விஷயங்களை ஊதி பெரிதாக்கி, அந்த பந்தத்தை அழித்துவிடக் கூடாது' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த பெண் ஒருவர், வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக, கணவரிடம் இருந்து விவகாரத்து வழங்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:ஒரு நல்ல திருமணத்தின் அடித்தளமே சகிப்புத்தன்மை, அனுசரிப்பு மற்றும் ஒருவரையொருவர் மதித்தலே ஆகும். அதுவும் சகிப்புத் தன்மை என்பது இருவரின் உள்ளார்ந்ததாக இருக்க வேண்டும். சின்ன சின்ன சச்சரவுகள், அற்பமான கருத்து வேறுபாடுகள் போன்றவை குடும்ப வாழ்க்கையில் சாதாரணமானவை. அவற்றை பெரிதுபடுத்தக்கூடாது.பெண்ணின் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் சிறிய விஷயத்தையும், பெரிதாக பேசி நல்ல திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விடுகின்றனர். திருமண உறவு முடிந்துவிட்டால், தங்களுக்கு பிறந்த குழந்தைகள் என்ன ஆவர் என்பதை நினைத்துக் கூட பார்க்காமல் விஷமத்தனமாக கணவன் - மனைவி இருவரும் சண்டையிட்டு கொள்கின்றனர். விவாகரத்து என்ற ஒன்று குடும்ப உறவுக்கு வந்துவிட்டால், அதனால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகளே. முழுப் பிரச்னையையும் நேர்த்தியாக கையாள்வதற்கு பதிலாக, குற்றவியல் நடவடிக்கைகளை துவங்குவது ஒருவர் ஒருவர் மீது வெறுப்பைத் தான் ஏற்படுத்தும். திருமண தகராறில் கடைசி முயற்சியாகவே போலீசாரை நாட வேண்டும். இந்த வழக்கில், கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதற்கான சாட்சியத்தில் தெளிவில்லை என்பதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Indian
மே 04, 2024 12:38

ஆமாம் திருமண பந்தத்தின் அடித்தளம் சகிப்புத்தன்மையும், பொறுமையும்தான் இது திருமணம் செய்துகொள்ளும் இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தாலும், தாய் தந்தைகள் உள்பட சுற்றியிருக்கும் இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் சுயநலத்திற்க்காக சில காலங்களில் கணவன் மனைவி இருவருக்கும் அது இல்லாமல் செய்துவிடுகிறார்கள் அதனாலேயே நிறைய குடும்பங்கள் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்கள்


Kanns
மே 04, 2024 11:19

Excellent Judgement Against Power Misusing Case Hungry Criminals Instead Sack & Punish CaseHungry Criminals Not Punishing Vested FalseComplainant GoondaGangsters


Ram
மே 04, 2024 08:38

குடும்ப விஷயத்தை பெரிதாக்கி கோர்ட்டுக்கு போனால் வாழ்கை அதன்பிறகு நரகமாகத்தான் இருக்கும் , தேவையில்லாமல் பிரிந்தவர்களை கேட்டுப்பாருங்கள்


அபுசாமி
மே 04, 2024 08:03

ஆமாம். வரதட்சணை கேட்டா குடுக்கணும். சகிப்புத் தன்மையோடு வாங்கிக்கணும்.


ஆரூர் ரங்
மே 04, 2024 10:56

மணப்பெண்கள் தட்டுப்பாடு உள்ளதால் மாப்பிள்ள வீட்டாரிடம் மணல் கயிறு போன்ற கண்டிஷன்களைப் போடும் பெண்களின் பெற்றோர்களை என்ன செய்ய? இதனால் நாற்பது வயதிலும் கன்னி கழியாத ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.


D.Ambujavalli
மே 04, 2024 06:38

‘வாழ்கிற பெண்ணைத் தாயார் கெடுத்தாளாம் ‘ என்பது பழமொழி புகுந்த இடத்தில் நடக்கும்/ இருக்கும் சிறு சிறு குறைகளைக்கூடப் பொறுக்காமல் தாய் வீட்டுக்கு ஒளிபரப்புவதும், பெற்றவர்கள் பேனை பெருமாள் ஆக்கி நகத்தால் கிள்ளி எறிய வேண்டியதை கோடாலிக்கும் அசையாது ஆக்கி மண விலக்கு வரை கொண்டு செல்கின்றனர் அக்காலங்களில் பெண் ‘வாழாவெட்டி’ என்று ஆகிவிட்டால் பெற்றவர்கள் கூறுவார்கள் ஆனால் இன்று divorcee என்று பெருமையாக கூறிக்கொள்கிறார்கள்


Kasimani Baskaran
மே 04, 2024 06:26

நீதித்துறை இந்திய சட்டப்புத்தகத்தை பார்த்து அதன் அடிப்படையில் தீர்ப்புச்சொல்ல வேண்டும் குடும்ப நீதி மன்றங்கள் இது போல ஆலோசனை சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம் அதை விட்டுவிட்டு உச்சநீதிமன்றமே தானே முன்வந்து தேவையற்ற அறிவுரைகளை வழங்கி நேரத்தை வீணடித்தால் நாடு நாசமாவது உறுதி


raja
மே 04, 2024 06:07

ஆமா இது நீதிமன்றத்துக்கு வந்த வழக்குகளுக்கு மட்டுமே முக்கியமா மூணு முறை சொல்லிட்டு மூணு நிமிசத்தில் வாங்குபவர்களுக்கு அல்ல


GMM
மே 04, 2024 05:59

விவாக ரத்து அதிகரிக்க பெற்றோர் மூலம் நிச்சயிக்காத திருமணம்? சட்டம் குடும்பத்தில் ஆக்கிரமிப்பு சமூகம் திருமணம் செய்து வைக்கும் விவகாரத்தை விசாரிக்காது பெண் தாய், சகோதரன் வீட்டில் இருப்பர் பின் உணர்த்து ஒன்றுபடுவர் விவாகரத்து கலெக்டர் முதலில் விசாரிக்க வேண்டும் பாலியல் போலீசார் விசாரிக்க கூடாது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை