லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ், பா.ஜ., உட்பட, அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரசாரம் செய்கின்றனர். சில கிராமத்தினர், 'எங்களுக்கு மோடியும் தேவையில்லை, சித்தராமையாவும் தேவையில்லை... மழைதான் வேண்டும்' என முகத்தில் அடித்தது போன்று கூறுகின்றனர்.'மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது முறையாக நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும்' என, பா.ஜ., போராடுகிறது. பா.ஜ.,விடம் இருந்து ஆட்சியை தட்டிப் பறிக்க, காங்கிரஸ் முயற்சிக்கிறது.அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள், தங்களின் ஆதரவாளர்கள், தொண்டர்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தீயாய் சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வேர்க்க, விறுவிறுக்க தொகுதியை சுற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தலைவர்களும் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.புதிய பிரச்னைபிரம்மாண்ட ரோடு ஷோ, பொதுக்கூட்டம், வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கின்றனர். கிராமம், கிராமமாக செல்கின்றனர். சில பகுதிகளில் வேட்பாளர்களுக்கு புதிய பிரச்னை துவங்கியுள்ளது.பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில், மக்கள் கேள்விக்கணைகளால் துளைக்கின்றனர். 'எங்களுக்கு மோடியும் வேண்டாம், சித்தராமையாவும் வேண்டாம். எங்களுக்கு மழைதான் வேண்டும்' என, கூறுகின்றனர்.கர்நாடகாவை பொறுத்தவரை, 2-023ம் ஆண்டு துரதிருஷ்டவசமானது. தென்மேற்கு பருவ மழை, எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. வடகிழக்கு பருவ மழையும் ஏமாற்றிவிட்டது. சில மாவட்டங்களில் கோடை மழை பெய்கிறது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை தலை காண்பிக்கவிலை. 200க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சியால் பாதிப்படைந்துள்ளன.மக்கள் கடுப்புஅணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. ஆறுகள், ஏரிகள் வற்றியுள்ளன. மக்களும், கால்நடைகளும் குடிநீர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். கிராமங்களில் பெண்கள் பல கி.மீ., துாரம் சென்று, குடிநீர் கொண்டு வரும் சூழ்நிலை உருவாகிஉள்ளது.இத்தகைய கடுமையான நிலையில், வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வருவதால் மக்கள் கடுப்படைகின்றனர். அவர்களிடம், 'எங்களூக்கு மோடியும் வேண்டாம், சித்தராமையாவும் வேண்டாம். லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுவதை விட, மழையே எங்களுக்கு முக்கியம். மழை பெய்தால் போதும்' எனக் கூறி, விரட்டி அடிக்கின்றனர்.- நமது நிருபர் -