உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகை எல்லாம் நீயே வச்சுக்கோ... அந்த பதக்கத்தை மட்டும்; திருடனிடம் மன்றாடிய கடற்படை வீரரின் குடும்பம்!

நகை எல்லாம் நீயே வச்சுக்கோ... அந்த பதக்கத்தை மட்டும்; திருடனிடம் மன்றாடிய கடற்படை வீரரின் குடும்பம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: கேரளாவின் வயநாட்டில் முன்னாள் கடற்படை வீரரின் வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்ற திருடனிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்துள்ளனர்.

திருட்டு

அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாவட்டமே நிலைகுலைந்த அந்த நேரத்தில், அப்பகுதியை சேர்ந்த முன்னள் கப்பற்படை வீரரான அமல் ஜான் என்பவரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில், பல லட்சம் மதிப்பு நகை, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள ரேடோ வாட்ச் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களுடன், பணியின் போது வாங்கிய மத்திய அரசின் பதக்கங்களையும் திருடிச் சென்றுள்ளனர். நிலச்சரிவு காரணமாக 3 நாட்கள் வெளியூருக்குச் சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்த முன்னாள் கப்பற்படை வீரர் அமல் ஜான் குடும்பத்தினர், இந்த திருட்டு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தனர்.

கோரிக்கை

இந்த நிலையில், 'திருடிச் சென்ற நகை, விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் நீயே வைத்துக் கொள், அந்தப் பதக்கங்களை மட்டும் திருப்பி கொடுத்துவிடு' என்று திருடர்களுக்கு அமல் ஜான் குடும்பததினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலை மதிப்பில்லாதவை

இது தொடர்பாக அமல் ஜானின் மாமா ஹுமாயுன் கபூர் விடுத்துள்ள பேஸ்புக் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், 'நீங்கள் திருடிச் சென்ற விலையுயர்ந்த பொட்களின் விலை எல்லாம் கணக்கு போட்டு பார்த்து விட்டோம். நீங்கள் எடுத்துச் சென்ற பதக்கங்கள் மற்றும் விருதுகள் விலை மதிப்பில்லாதவை.

நீங்களே வச்சுக்கோங்க

இந்த சோதனையான காலத்தில் எங்களின் வீட்டை உடைத்து பொருட்களை எடுத்துச் சென்ற உங்களின் சிரமம் எங்களுக்கு புரிகிறது. நகை, ரேடோ வாட்ச் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், பணியின் போது அரசால் பாராட்டப்பட்டு, கவுரவிக்கப்பட்டு வழங்கப்பட்ட விருதுகளையும், பதக்கங்களையும் மட்டும் திருப்பி கொடுத்து விடுங்கள்.

திருப்பி கொடுங்க

ஒரு கிராமத்தில் இருந்து படித்து என்.டி.ஏ., தேர்வு எழுதி, இந்த நிலைக்கு சென்று, அங்கு சிறப்பாக பணிபுரிந்து விருது வாங்கும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரின் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கும் என்று உங்களுக்கே நன்கு தெரியும். எனவே, பதக்கங்களை மட்டும் கொடுத்து விடுங்கள். நீங்கள் நினைத்தாலும், அரசின் அந்த விருதுகள் மற்றும் பதக்கங்களை விற்க முடியாது, யாரும் வாங்கவும் மாட்டார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தஞ்சை மன்னர்
ஆக 17, 2024 14:10

காவி மூளைக்கும் எது புகுந்தாலும் இப்படித்தான் சிந்திக்க தோணும் போல


saiprakash
ஆக 17, 2024 13:29

அனைத்திலும் வன்மம்மானா பார்வைதான்


S.Martin Manoj
ஆக 17, 2024 13:17

நாட்டுக்காக உழைக்கும் இராணுவ வீரர்களிடம் கூட உங்கள் கீழ்த்தரமான மதவெறியை வெளிப்படுத்தும் கேவலமான இழி பிறவிகள், உங்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.


Selvaraj C
ஆக 17, 2024 12:29

, கண்டிபபாக திரும்ப கிடைக்கும்


Selvaraj C
ஆக 17, 2024 12:26

,,,,, . கண்டிப் ப்பாக திரும்ப கிடைக்கும்


Azar Mufeen
ஆக 17, 2024 12:14

ஏன் கலப்பினமாக இருந்தால் என்ன, நாம் வாழும் பூமி அனைவரையும் வாழ வைக்கும்


subramanian
ஆக 17, 2024 11:24

ஒரு வேளை அவன் பதக்கத்தை தான் தான் பெற்றதாக கூறிக்கொள்வானோ?


subramanian
ஆக 17, 2024 11:20

திருடன் எப்போதும் தனக்கு தேவை இல்லாத பொருட்களை தூக்கி எறிந்து விட்டு போய்விடுவான். அக்கம் பக்கத்தில் தேடி பார்க்கவும்.


Rajathi Rajan
ஆக 17, 2024 11:19

இவரது கோரிக்கை காதில் விழுந்தால் கிடைக்கும், அல்லது முஸ்லீம் என்பதால் கிடைக்காமலும் போகும், எல்லாம் செயல்..


Tetra
ஆக 17, 2024 12:43

பறி கொடுத்தவர் கிறித்தவர்


Barakat Ali
ஆக 17, 2024 10:55

அமல் ஜானின் மாமா ஹுமாயுன் கபூர் .......... கலப்பினம் போலிருக்கு .........


Rajathi Rajan
ஆக 17, 2024 19:53

நீ ல்லாம் முஸ்லீம் பேரை வைத்து வன்மம் கக்கும் சாங்கி என எல்லாருக்கும் தெரியும் ... அமீர் ஜான், அமர் ஜான், என்பது முஸ்லீம் பேர் தான்.. அது போல இவர் பெயரும்...


தஞ்சை மன்னர்
ஆக 19, 2024 11:14

எது புகுந்தாலும் இப்படித்தான் சிந்திக்க தோணும் போல4


மேலும் செய்திகள்