மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
2 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
8 hour(s) ago | 2
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
8 hour(s) ago
திருவனந்தபுரம், கேரளாவில் முதல்முறையாக அரசு மருத்துவமனையில், 5 வயது சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த 5 வயது சிறுமி, கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, 25 வயதான குழந்தையின் தாய், கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார். இதை தொடர்ந்து கோட்டயம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடந்த ஆப்பரேஷனில், தாயின் கல்லீரல் குழந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கை:குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் மேற்கொள்வது அபூர்வமானது. நேரடி அறுவை சிகிச்சை மிக சிக்கலானது.எனினும் இரைப்பை அறுவை சிகிச்சைத்துறை தலைவர் ஆர்.எஸ்.சிந்து தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிறப்பாக செயல்பட்டு ஆப்பரேஷனை வெற்றிகரமாக செய்துஉள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hour(s) ago | 1
8 hour(s) ago | 2
8 hour(s) ago