உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு மாநகராட்சியுடன் நான்கு பஞ்சாயத்து இணைப்பு?

பெங்களூரு மாநகராட்சியுடன் நான்கு பஞ்சாயத்து இணைப்பு?

பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சோமசேகர். பா.ஜ., மீது அதிருப்தியில் உள்ள இவர், காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கிறார்.சமீபத்தில் துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்த அவர், கும்பலகோடு கிராம பஞ்சாயத்தை, பெங்களூரு மாநகராட்சியுடன் இணைக்கும்படி வலியுறுத்தினார்.இதுதொடர்பாக பெங்களூரு நகர வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, மக்கள் அதிகமாக உள்ள கும்பலகோடு, சாந்திபுரா, கோனப்பன அக்ரஹாரா, சர்ஜாபுரா ஆகிய நான்கு கிராம பஞ்சாயத்துகளை, பெங்களூரு மாநகராட்சியுடன் இணைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த கிராம பஞ்சாயத்துகளில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சராசரியாக 11,000 முதல், 12,000 மக்கள் வரை இருந்தனர். தற்போது, 40,000 முதல், 50,000 மக்கள் வரை இருக்கின்றனர்.மாநகராட்சியுடன் கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணியை நகர வளர்ச்சித்துறை அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை