உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி

ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜனாதிபதியை சந்தித்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடிலோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இதையடுத்து தே.ஜ., கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் கூட்டம் இன்று பழைய பாராளுமன்ற வளாகத்தில நடந்தது. இதில் கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கூட்டணி கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்துடன் மாலை ஜனாதிபதி மாளிகை சென்ற நரேந்திர மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது ஆதரவு எம்.பி.க்களின் கடிதத்தையும் வழங்கினார். ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ,மோடியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். வரும் 9-ம் தேதி இரவு 7.15 மணி அளவில் பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருடன் எம்,பி.,க்களும் அமைச்சர்களாக பதவிபிரமாணம் எடுத்து கொள்ள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

A1Suresh
ஜூன் 07, 2024 20:47

ஊரு கண்ணு உறவு கண்ணு நாயி கண்ணு கெட்ட கண்ணு எல்லாம் கழிந்து அனைத்து த்ருஷ்டிகளும் தொலைந்து மோடிஜியின் நல்லாட்சி அமைந்து அது ஐந்தாண்டு காலங்கள் தொடர நல்வாழ்த்துக்கள்


V Venkatachalam, Chennai-87
ஜூன் 07, 2024 22:30

சுரேஷ்-ன் வாழ்த்துக்கள் அருமையிலும் அருமை.. படித்து பரவசம் அடைந்தேன்..


Raghav
ஜூன் 07, 2024 20:09

Under your leadership our country will cherish


Krismoo
ஜூன் 07, 2024 18:44

புள்ளி கூட்டணிக்கு புள்ளி வச்சுட்டார் மோடி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை