உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பருவநிலை மாற்றம் குறித்து பில்கேட்ஸ் உடன் மோடி பேச்சு

பருவநிலை மாற்றம் குறித்து பில்கேட்ஸ் உடன் மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இயற்கை மற்றும் பருவநிலைக்கு தீங்கு விளைவிக்காத புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை சீர்குலைக்காத வாழ்க்கை முறையை இந்த உலகம் கடைபிடிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.அமெரிக்காவின், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தார். அப்போது, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல்வேறு விஷயங்களை அவர்கள் விரிவாக விவாதித்தனர்.

மனநிலை மாற்றம்

அப்போது, பில்கேட்சிடம் பிரதமர் மோடி கூறியதாவது:ஒரு நாட்டின் முன்னேற்றத்தை நாம் எப்படி கணக்கிடுகிறோம் என்பதில் இருந்தே சவால் துவங்கி விடுகிறது. உதாரணத்துக்கு, ஒரு நாட்டின் ஸ்டீல் மற்றும் எரிசக்தி பயன்பாட்டின் அடிப்படையில் அந்நாட்டின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. இதை வைத்தே அந்நாட்டின் பொருளாதாரமும் கணக்கிடப்படுகிறது.இந்த அளவீடு முறைகளை நாம் தொடர்வதால், ஸ்டீல் மற்றும் மின்சார பயன்பாடு அதிகரிக்கிறது. இதனால், கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிக்கிறது. இந்த நடைமுறையில் மாற்றம் வேண்டும். நம் மனநிலையிலும் மாற்றம் வேண்டும். பருவநிலைக்கு தீங்கு விளைவிக்காத வாழ்க்கை முறைகளை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். இயற்கை மற்றும் காலநிலைக்கு தீங்கு விளைவிக்காத கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.ஜி.டி.பி., எனப்படும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை, பசுமை ஜி.டி.பி., என்ற கருத்தை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மின்சாரத்தையும், தண்ணீரையும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், பருவநிலை மாற்றத்துக்கு நாம் தீர்வு காண முடியாது. விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.இந்த துறைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

ஆபத்து

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மிகவும் முக்கியமான ஒரு அம்சம். ஆனால், போதிய பயிற்சி பெறாத, திறமையற்றவர்களின் கைகளில் சிக்கினால், இது, தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த தொழில்நுட்பத்தை எதற்கு பயன்படுத்த வேண்டும்; எதற்கு பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறையை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை