உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு தசரா முன்னேற்பாடு யானைகள் பட்டியல் தயாரிப்பு

மைசூரு தசரா முன்னேற்பாடு யானைகள் பட்டியல் தயாரிப்பு

பெங்களூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா திருவிழாவுக்கு, முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளது. வனத்துறை அதிகாரிகள், தசராவில் பங்கேற்கும் யானைகள் பட்டியலை தயாரித்துள்ளனர்.மைசூரு தசரா உலக பிரசித்தி பெற்றதாகும். கர்நாடகா பாரம்பரியத்தின் அடையாளமாகும். பல நுாற்றாண்டு வரலாறு கொண்டதாகும். ஆண்டுதோறும் நடக்கும் தசரா கொண்டாட்டத்தில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் பங்கேற்பர்.நடப்பாண்டும் மைசூரு தசரா திருவிழாவை, சிறப்பாக கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. மைசூரு மாவட்ட நிர்வாகம் இதற்கான முன்னேற்பாடுகளை துவக்கியுள்ளது. மைசூரு தசராவில் ஜம்பு சவாரி மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும்.இம்முறை அக்டோபர் 12ல், விஜயதசமி வருகிறது. அன்றைய தினம் ஜம்பு சவாரி நடக்கும். இதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, தசரா யானைகள், மைசூரு அரண்மனை வளாகத்தில் முகாமிட்டு பயிற்சி பெறும். வனத்துறை அதிகாரிகள், வெவ்வேறு முகாம்களுக்கு சென்று, தசரா யானைகளின் பட்டியலை தயாரித்துள்ளனர். ஆகஸ்ட் இரண்டாம் வாரம், கஜ பயணம் துவங்கும்.அரண்மனை புரோகிதர், ஆகஸ்ட் 9 மற்றும் 11ம் தேதி என, இரண்டு நாட்கள் முகூர்த்தம் நிர்ணயித்துள்ளார். அரசு ஒப்புதல் அளித்த பின், ஆகஸ்ட் 9 அல்லது 11ல் கஜ பயணம் துவங்கும். இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.வனத்துறை அதிகாரிகள், மத்திகோடு, துபாரே, ராம்புரா, பீமனகட்டே, ஹாரங்கி யானைகள் முகாமுக்கு சென்றனர். யானைகளின் ஆரோக்கியம், திறன், சுபாவத்தை பரிசோதித்து, 20 யானைகள் கொண்ட பட்டியல் தயாரித்துள்ளனர். இந்த பட்டியலை உயர் மட்ட கமிட்டியில் அளித்து, 14 யானைகளை தேர்வு செய்வர்.சட்டசபை முடிந்த பின், முதல்வர் சித்தராமையா தலைமையில் உயர் மட்ட கமிட்டி கூட்டம் நடக்கும். இதில் கஜ பயணம் துவங்குதற்கான தேதி முடிவு செய்யப்படும். இம்முறையும் தசராவில் 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமக்கும் பொறுப்பை, கேப்டன் அபிமன்யு யானை ஏற்கும். தனஞ்செயா, கோபாலசாமி, மகேந்திரா, பீமா, ஹிரண்யா, லட்சுமி, வரலட்சுமி உட்பட, 20 யானைகளின் பெயர் பட்டியலில் உள்ளது.வழக்கம் போல, இரண்டு கட்டங்களாக, யானைகளை அழைத்து வர வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டத்தில் அபிமன்யு உட்பட ஒன்பது யானைகள் வரும். இரண்டாம் கட்டத்தில் மற்ற யானைகள் மைசூரு அரண்மனைக்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி