உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாகசந்திரா - மாதவாரா சோதனை ஓட்டம் வெற்றி

நாகசந்திரா - மாதவாரா சோதனை ஓட்டம் வெற்றி

பெங்களூரு: பெங்களூரில் நாகசந்திரா - மாதவாரா இடையே நேற்று ஆறு பெட்டிகள் கொண்ட நம்ம மெட்ரோ ரயில் சோதனை வெற்றிகரமாக நடந்தது.பெங்களூரு நம்ம மெட்ரோ 2வது பேசில், பசுமை வழித்தடத்தில், மைசூரு சாலை முதல் செல்லகட்டா வரையிலும்; எலச்சனஹள்ளி முதல் சில்க் இன்ஸ்டிடியூட் வரையிலும்; பையப்பனஹள்ளி முதல் ஒயிட்பீல்டு வரையிலும் நீட்டிக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.அதுபோன்று, துமகூரு சாலையில் உள்ள நாகசந்திராவில் இருந்து மாதவாரா வரையிலான 3.17 கி.மீ., மெட்ரோ ரயில் பணிகள், 2017ல் துவங்கியது. கடந்த 2023லேயே இப்பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால், நிலம் கையகப்படுத்துதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் முடிந்துள்ளது.நேற்று இவ்வழிடத்தில் ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. குறைந்தபட்சம் மணிக்கு 5 கி.மீ., முதல் அதிகபட்சம் 35 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது.இவ்வழித்தடத்தில் நாகசந்திராவில் இருந்து புறப்படும் ரயில், மஞ்சுநாத் நகர், ஜிந்தால் அதன் பின் மாதவாரா மெட்ரோ ரயில் நிலையத்தை சென்றடையும்.வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிந்துள்ளதால், செப்டம்பர் முதல் வாரத்தில் அல்லது காந்தி ஜெயந்தியான அக்., 2ம் தேதி துவக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை