உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதந்திர தின விழாவில் நேதாஜி சிலை அவமதிப்பு?

சுதந்திர தின விழாவில் நேதாஜி சிலை அவமதிப்பு?

தங்கவயல் : தங்கவயல் நகராட்சி திடலில் அரசு விழாவாக சுதந்திர தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப் பட்டது. விழா நடந்த இடத்தின் அருகே உள்ள நேதாஜி சிலைக்கு யாரும் மாலை அணிவிக்கவில்லை. இதை, விழா ஏற்பாட்டாளர்களும் கண்டுகொள்ளவில்லை.தங்கவயலில், சுதந்திர தின விழா நடைபெற்ற நகராட்சி திடலுக்கும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை உள்ள பூங்காவுக்கும் 50 அடி துாரம் கூட இல்லை.சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்த நகராட்சி, மற்றும் தாலுகா நிர்வாகம் அவரின் சிலைக்கு மாலை அணிவிக்காமல் அலட்சியம் காட்டியது. இதனால் மாணவர்கள், தேசபக்தர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்தனர். தேச விடுதலை போரில் முக்கிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை நிறுவியவர்கள் மிகவும் வருந்தினர்.சுதந்திர தின விழாவையொட்டி தேசப் பிதா காந்தியடிகள், சட்டப் பிதா அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்தவர்கள், நேதாஜி சிலையை கண்டு கொள்ளாதது தேச துரோகம் போன்றது என, சிலையை நிறுவியவர்கள் வருந்தினர். 'இனி, சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் நேதாஜி சிலைக்கும் மாலை அணிவிக்க வேண்டும்' என்று கோலார் கலெக்டர், தங்கவயல் தாசில்தார், நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை