மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
விஜயவாடா: ஆந்திராவில், மனைவியரை வீட்டுக்கு அனுப்பாத மாமனாரை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன், மருமகன்கள் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆந்திர மாநிலம் ஏலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாச ராமானுஜர். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளை, குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், இளைய மகளை, விஜயவாடாவைச் சேர்ந்த நபருக்கும் திருமணம் செய்து வைத்தார். இரு மகள்களுக்கும் குழந்தைகள் உள்ளனர்.கடந்த 10 மாதங்களுக்கு முன், இரு மகள்களும் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது, தங்களது கணவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும், கவனித்துக் கொள்ளும் விதம் குறித்தும் அவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த சீனிவாச ராமானுஜர், இரு மகள்களையும் அவர்களது கணவர்களின் வீட்டிற்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தார்.இதையறிந்த இரு மருமகன்களும், மனைவியரை தங்கள் வீட்டுக்கு அனுப்பும்படி பல முறை மாமனாரிடம் கெஞ்சினர். எனினும், மகள்களை அனுப்ப முடியாது என, சீனிவாச ராமானுஜர் திட்ட வட்டமாக தெரிவித்தார்.இதனால் செய்வதறியாது திகைத்த இரு மருமகன்களும், ஏலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு சமீபத்தில் வந்தனர். பின், திடீரென கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து, தங்களது மனைவியரை சேர்த்து வைக்க வேண்டும் என முழக்கமிட்டபடி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
5 hour(s) ago